1991 பூகம்பம் முதல் 2013 வெள்ளம் வரை உத்தரகாண்டை ஆட்டிப்படைத்த இயற்கை பேரழிவுகள்!

1991 பூகம்பம் முதல் 2013 வெள்ளம் வரை உத்தரகாண்டை ஆட்டிப்படைத்த இயற்கை பேரழிவுகள்!

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிப்பாறை வெடிப்பால் தொளிகங்கா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இதுவரை எட்டு பேர் உயிரிழந்திருக்கின்றனர். 100க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.

1991 பூகம்பம் முதல் 2013 வெள்ளம் வரை உத்தரகாண்டை ஆட்டிப்படைத்த இயற்கை பேரழிவுகள்!

மலைப் பிரதேசமான உத்தரகாண்டில் இதுபோன்ற இயற்கைப் பேரழிவுகள் நடப்பதும் உயிர்கள் பறிபோவதும் இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு பல்வேறு முறை மிகப் பெரிய பேரழிவுகளை அம்மாநிலம் சந்தித்திருக்கிறது. அதில் சிலவற்றை குறித்துப் பார்க்கலாம்.

1991 உத்தர்காசி பூகம்பம்:

உத்தரகாண்ட் மாநிலம் பிரிக்கப்படுவதற்கு முன் 1991ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.8 என்று பதிவான பூகம்பத்தால் 768 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளை இழந்தனர். கான்பூர் ஐஐடியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின்படி, சில நொடி பூகம்பத்தால் 1,294 கிராமங்களில் வசித்துவந்த 3 லட்சத்துக்கும் மேலான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்தது தெரியவந்தது.

1991 பூகம்பம் முதல் 2013 வெள்ளம் வரை உத்தரகாண்டை ஆட்டிப்படைத்த இயற்கை பேரழிவுகள்!

1998 மால்பா நிலச்சரிவு:

பித்தாரோகார்க் மாவட்டம் மால்வா என்ற சிறிய கிராமத்தில் 1998ஆம் ஆண்டு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 55 கைலாஷ் யாத்ரீகர்கள் உள்பட 255 பேர் உயிரிழந்தனர்.

1991 பூகம்பம் முதல் 2013 வெள்ளம் வரை உத்தரகாண்டை ஆட்டிப்படைத்த இயற்கை பேரழிவுகள்!

1999 சமோலி பூகம்பம்:

1999ஆம் ஆண்டு சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் பூகம்பத்தால் அண்டை மாவட்டமான ருத்ரபிரயாக்கும் பெரிதளவில் பாதிக்கப்பட்டது. இதனால் நிலச்சரிவும் நீரோட்டத்தில் மாற்றங்களும் ஏற்பட்டன. சாலைகளிலும் விரிசல்கள் உண்டாகின.

1991 பூகம்பம் முதல் 2013 வெள்ளம் வரை உத்தரகாண்டை ஆட்டிப்படைத்த இயற்கை பேரழிவுகள்!

2013 கேதார்நாத் வெள்ளம்:

உத்தரகாண்ட் மாநிலத்தை மையம் கொண்ட புயலால் வரலாறு காணாத மழை கொட்டித்தீர்த்தது. இதனால் கேதார்நாத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்தப் பேரழிவால் சுமார் 6 ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர். இதனால் சாலைகளும் பாலங்களும் சிதைவுக்குள்ளாகின.