‘கோவில் அடிமை நிறுத்து’ கண்டுகொள்ளாத அரசும்; சத்குருவின் 100 பதிவுகளும்…!

 

‘கோவில் அடிமை நிறுத்து’ கண்டுகொள்ளாத அரசும்; சத்குருவின் 100 பதிவுகளும்…!

தமிழக கோவில்கள் மீண்டும் உயிர்ப்பிக்கும் வகையில் அதன் நிர்வாகத்தை பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதற்கான ஒப்புதலை தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அளிக்க வேண்டும் என்றும் அவர் முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோரிடம் கேட்டுக்கொண்டார்.இருப்பினும் அதிமுக அரசும், திமுகவும் இதை கண்டுகொள்ளாத நிலையில் இதற்கு செவிசாய்த்தது அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மட்டும் தான். சத்குருவின் வேண்டுகோளை தேர்தல் அறிக்கையில் தமாகா குறிப்பிட்டதற்கு சத்குரு வரவேற்பு தெரிவித்திருந்தார்.

‘கோவில் அடிமை நிறுத்து’ கண்டுகொள்ளாத அரசும்; சத்குருவின் 100 பதிவுகளும்…!

தமிழகத்தில் பழம்பெரும் கோவில்கள் பல சிதிலமடைந்து காணப்படுகிறது. அத்துடன் இன்னும் பல நூறு கோவில்கள் அந்த நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. இக்கோவில்கள் இதுபோன்ற நிலையை அடைய காரணம் அரசுத் துறையின் கீழ் இருப்பதுதான். இதனால் கோவில்களில் இருந்து அரசு வெளியேற வேண்டும் என்றும் ஆன்மீக ஆர்வம் கொண்டவர்கள் அல்லது இந்து சமயத்தவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு முன்வைத்துள்ளார்.

இதனால் ‘கோவில் அடிமை நிறுத்து’ என்ற இயக்கத்தை தொடங்கியுள்ள அவருக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பராமரிப்பின்றி இருக்கும் கோவில்களில் குறித்து அறியும் முயற்சியில் இறங்கியுள்ள ஈஷா யோகா மையம் அதற்கான கட்டுப்பாட்டு எண்ணை அறிவித்து பக்தர்களின் உதவியை நாடியுள்ளது.

கோவில் எத்தனை ஆண்டுகள் பழமையானது? அங்கு பூஜைகள் தினமும் நடக்கிறதா ?கும்பாபிஷேகம் நடந்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது? உள்ளிட்ட பல தகவல்களை ஈஷா யோகா மையம் அளித்துள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு நாம் தெரிவிக்கலாம். இதன் மூலம் தமிழகத்தில் பராமரிப்பின்றி இருக்கும் கோவில்களை அறிந்துகொள்ளலாம்.

இந்த நிலையில் ஈஷா நிறுவனர் சத்குரு தனது வேதனையை வெளிப்படுத்தும் விதமாக, மோசமான நிலையில் இருக்கும் 100 கோவில்களின் வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இப்பதிவுகள் யாரையும் புண்படுத்துவதற்கு அல்ல. இச்சமூகத்தின் அழுகுரல் கேட்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த செயல்பாட்டை முன்னெடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.