இனி வாக்காளர் அடையாள அட்டையை இலவசமாக பெறலாம்!

 

இனி வாக்காளர் அடையாள அட்டையை இலவசமாக பெறலாம்!

அனைத்து வாக்காளர்களுக்கு மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளை இலவசமாக வழங்க மாநில அரசுகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இனி வாக்காளர் அடையாள அட்டையை இலவசமாக பெறலாம்!

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை அடுத்து, தமிழகத்தில் உள்ள 342 அரசு இ – சேவை மையங்களிலும் மாற்று வாக்காளர் அடையாள அட்டை தேவைப்படும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்க தமிழக தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி வரும் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை தேவைப்படும் தமிழக வாக்காளர்கள் இ சேவை மையங்கள் மூஅல்ம் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.