இன்று நள்ளிரவு முதல் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இலவச டிக்கெட் -திருமலை தேவஸ்தானம்

இன்று நள்ளிரவு முதல் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இலவச டிக்கெட் -திருமலை தேவஸ்தானம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசிக்காக கடந்த 25-ஆம் தேதி முதல் முதல் வரும் ஜனவரி 3-ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் வழியாக சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்பட்டது. இந்த தரிசனத்துக்கு ரூ.300 வசூலிக்கப்பட்டது. கொரோனா பரவலால் குறைந்த அளவிலான் பக்தர்களுக்கு மட்டுமே தரிசன டோக்கன் வழங்கப்பட்டது.

இன்று நள்ளிரவு முதல் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இலவச டிக்கெட் -திருமலை தேவஸ்தானம்

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்களுக்கு இன்று நள்ளிரவு 12 மணி முதல் இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படும் என திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பூதேவி காம்பளக்ஸ், விஷ்ணு நிவாசம் ஓய்வு அறையில் இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று டிக்கெட் பெரும் பக்தர்கள் 4-ஆம் தேதி முதல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.