ஈரோட்டில் இலவச மருத்துவ முகாம்: 3 லட்சம் பேருக்கு பரிசோதனை!

 

ஈரோட்டில் இலவச மருத்துவ முகாம்: 3 லட்சம் பேருக்கு பரிசோதனை!

ஈரோடு மாவட்டத்தில் இரண்டாவது கட்டமாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தினமும் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மாநகர் பகுதியில் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மொத்த பாதிப்பில் 60 சதவீதம் பேர் மாநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தான். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் மாநகராட்சியுடன் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஈரோட்டில் இலவச மருத்துவ முகாம்: 3 லட்சம் பேருக்கு பரிசோதனை!

மிஷன் ஜூரோ திட்டம் தொடங்கப்பட்டு மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மருத்துவ முகாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த மருத்துவ முகாமில் சளி ,காய்ச்சல், இருமல் உள்ள மக்கள் பரிசோதித்து வருகின்றனர் அவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக பி சி ஆர் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றனர் .

ஈரோட்டில் இலவச மருத்துவ முகாம்: 3 லட்சம் பேருக்கு பரிசோதனை!

பரிசோதனை முடிவில் பாசிட்டிவ் வரும் நபர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நோய் உடனுக்குடன் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த இலவச மருத்துவ முகாமுக்கு பொதுமக்கள் மக்களிடம் வரவேற்பு உள்ளது. மொத்தம் இதுவரை இந்த மருத்துவ முகாமில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் பரிசோதனை செய்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இன்னும் இந்த இலவச மருத்துவ முகாம் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது . பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.