‘ஒரு கோடி மக்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர்’ – பட்ஜெட்டில் அறிவிப்பு!

 

‘ஒரு கோடி மக்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர்’ – பட்ஜெட்டில் அறிவிப்பு!

உஜ்வாலா திட்டத்தின் கீழ் மேலும் ஒரு கோடி பயனாளிகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என மத்திய பெட்ஜெட் தாக்கலின் போது நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய அவர், 100 மாவட்டங்களில் குழாய் மூலம் சமையல் எரிவாயு விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 100 மாவட்டங்களில் எரிவாயு விநியோக குழாய் கட்டமைப்பு திட்டமிடப்பட்டுள்ளது. சுற்று சூழலை பாதுகாக்க அடுத்த ஆண்டு ஹைட்ரஜன் எரிவாயு திட்டம் செயல்படுத்தப்படும். ரூ.2,000 கோடியில் 7 துறைமுக திட்டங்கள் செயல்படுத்தப்படும். மின் துறையில் 138 ஜிகாவாட் திறன் சேர்க்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

‘ஒரு கோடி மக்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர்’ – பட்ஜெட்டில் அறிவிப்பு!

மின் துறையில் 138 ஜிகாவாட் திறன் சேர்க்கப்பட்டுள்ளது. குறைந்த விலை வீடுகளை கட்டும் திட்டங்களுக்கு 2022 வரை வரிச் சலுகை அளிக்கப்படும். தங்கத்திற்கான இறக்குமதி வரி 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வீட்டுக் கடன் வட்டி சலுகை ஒரு ஆண்டு நீடிக்கப்பட்டுள்ளது என்றும் நாட்டில் இதுவரை 6.45 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தாகவும் அவர் கூறினார்.

மேலும், தனிநபர் வருமான வரி விலக்கு 2.50 லட்சம் ஆகவே தொடரும் என்றும் கடந்த சில மாதங்களாக ஜிஎஸ்டி வசூலில் சாதனை நிகழ்த்தப்பட்டு வருகிறது என்றும் நிர்மலா சீதாராமன் பெருமிதத்துடன் கூறினார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரை ஒரு மணி நேரம் 50 நிமிடம் நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.