திருப்பதியில் நாளை முதல் இலவச தரிசனத்துக்கு அனுமதி

 

திருப்பதியில் நாளை முதல் இலவச தரிசனத்துக்கு அனுமதி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் இலவச தரிசனம் தொடங்கவிருப்பதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, திருமலை திருப்பதி கோவிலிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் வழக்கமான அனைத்து பூஜைகளும் நடந்து வந்தன. கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதன்விளைவால் கொரோனா பாதிப்பு அங்கு அதிகரிக்க தொடங்கியது.

திருப்பதியில் நாளை முதல் இலவச தரிசனத்துக்கு அனுமதி

இந்நிலையில் திருமலையில் நடந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய திருப்பதி தேவஸ்தான சேர்மன் சுப்பாரெட்டி, “ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் நிலையில், வழக்கமாக வழங்கப்படும் இலவச தரிசன டிக்கெட்டுகள் அந்தந்த கவுண்டர்களில் கிடைக்கும். பிரமோற்சவ ஏகாந்த திருவிழா கோயிலின் உள்ளேயே நடைபெறும்; வங்கிகளில் உள்ள ஏழுமலையான் கோயில் வைப்பு நிதியில் இருந்து பணம் எடுக்க ஆந்திர அரசிடம் பேசி முடிவெடுக்கப்படும். தேவஸ்தான ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றால், அதற்கான தொகையை தேவஸ்தானம் வழங்கும்” எனக் கூறினார்.