சீனாவில் இருந்து ஆப்பிள் பொருட்கள் தயாரிப்பதை கைவிடும் ஃபாக்ஸ்கான் ?

 

சீனாவில் இருந்து ஆப்பிள் பொருட்கள் தயாரிப்பதை கைவிடும் ஃபாக்ஸ்கான் ?

மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் முன்னணி ஒப்பந்த நிறுவனமான, ஃபாக்ஸ்கான், சீனாவில் இருந்து ஆப்பிள் நிறுவன பொருட்கள் தயாரிப்பதை கைவிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்பிள் நிறுவனப் பொருட்களை வியட்நாம் ஆலையில் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆப்பிள் ஐபேட், மேக் புக் உள்ளிட்ட சாதனங்களை ஒப்பந்த அடிப்படையில், ஃபாக்ஸ்கான் நிறுவனம் சீனாவில் இருந்து அதிக அளவில் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமான பனிப்போர் நீடித்து வருகிறது. இதையடுத்து அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளை, சீனாவிலில் தயாரிப்பதை குறைத்துக்கொள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சீனாவில் இருந்து ஆப்பிள் பொருட்கள் தயாரிப்பதை கைவிடும் ஃபாக்ஸ்கான் ?

இது தொடர்பாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகையில், அமெரிக்க நிறுவனங்கள், சீனாவில் உற்பத்தி செய்வதை குறைத்துக் கொள்ள வேண்டும் என அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வந்தார். அதையடுத்து, பல நிறுவனங்கள் தொடர்ச்சியாக சீனாவில் உற்பத்தி செய்வதை குறைத்து வந்தன. குறிப்பாக, சீனாவில் தயாரிக்கப்படும் மின்னணு சாதனங்களுக்கு அமெரிக்காவில் அதிக இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. மேலும், அமெரிக்க பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக சீன தயாரிப்புகள் இறக்குமதி செய்வதும் குறைக்கப்பட்டன. இந்த வர்த்தகச் சிக்கல்கல் காரணமாக, சீனாவிலிருந்து ஆப்பிள் நிறுவன பொருட்களை தயாரிப்பதை குறைத்துக்கொண்டு, வியட்நாம் செல்ல ஃபாக்ஸ்கான் திட்டமிட்டுள்ளது. மெக்ஸிகோ அல்லது இந்தியாவுக்கு கொண்டு செல்வதற்கும் ஃபாக்ஸ்கான் திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில், சீனாவில் இருந்து ஆப்பிள் உபகரணங்கள் உற்பத்தியை குறைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை, அநேகமாக அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு காலத்தில் நடக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில் இருந்து ஆப்பிள் பொருட்கள் தயாரிப்பதை கைவிடும் ஃபாக்ஸ்கான் ?

அப்பிள் நிறுவனத்தின் அறிவுறுத்தலின் பேரில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது. இது தொடர்பாக ஃபாக்ஸ்கான் அதிகாரிகள் கூறுகையில், சீனாவில் இருந்து வெளியேறுவது, நிறுவனத்தின் கொள்கை சார்ந்த முடிவு என்றும், எங்களது வாடிக்கையாளர்களுடன் வர்த்தக ரீதியான சில உறவுகள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என நினைக்கிறோம். அதனால் இந்த முடிவை மேற்கொள்வதாக கூறியுள்ளனர். ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துக்கு மட்டுமல்லாமல், ஜப்பானின் சோனி நிறுவனத்துக்கும் ஒப்பந்த அடிப்படையில் மின்னணு பொருட்களை தயாரித்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.