ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் 4 வாரங்கள் கொரோனா பொதுமுடக்கம்

 

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் 4 வாரங்கள் கொரோனா பொதுமுடக்கம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் 4 வாரங்கள் கொரோனா பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்தில் புதிதாக நிறைய பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்படத் தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து மெல்போர்னின் 10 பகுதிகளில் நான்கு வாரங்கள் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் வருகிற ஜூலை 29-ஆம் தேதி வரை இந்த பொதுமுடக்கம் கடைபிடிகக்பப்டும் என விக்டோரியாவின் பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் 4 வாரங்கள் கொரோனா பொதுமுடக்கம்

இருப்பினும் மெல்போர்னில் உள்நாட்டு விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலில் இருப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்பதால், அடுத்த இரண்டு வாரங்களுக்கு மெல்போர்னுக்கு வரும் சர்வதேச விமானங்களைத் திருப்பி விடுமாறு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனிடம் விக்டோரியா மாநில அரசு கேட்டுள்ளது.