ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியில் 4 காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா.. சமாதானப்படுத்த போராடும் கட்சி

ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியில் 4 காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா.. சமாதானப்படுத்த போராடும் கட்சி

ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியில் கடந்த 4 தினங்களில் காங்கிரஸை சேர்ந்த 4 தலைவர்கள் ராஜினாமா செய்தனர்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தின் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டார். நேரு குடும்பத்துக்கு தொடர்ந்து வெற்றியை அளித்த வந்த அமேதி தொகுதி கடந்த தேர்தலில் ராகுல் காந்திக்கு தோல்வியை கொடுத்தது. இருப்பினும், வயநாடு தொகுதி மக்கள் அவரை வெற்றி பெற வைத்தனர்.

ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியில் 4 காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா.. சமாதானப்படுத்த போராடும் கட்சி
காங்கிரஸ்

ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றதால், அந்த தொகுதி நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பெரிய கவனத்தை ஈர்த்தது. இதனால் அந்த தொகுதியில் சிறு சம்பவம் நடந்தாலும் அது அனைத்து பகுதிகளிலும் கவனத்தை ஈர்க்கும். இந்த சூழ்நிலையில் கடந்த 4 தினங்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 தலைவர்கள் கட்சியிலிருந்து விலகியுள்ளனர். வயாநட்டில் 3 பேர் கொண்ட குழு மட்டுமே வழிநடத்துகிறது. காங்கிரஸ் நிர்வாகம் வயநாட்டு தொகுதியில் தோல்வி அடைந்து விட்டது. மேலும் காங்கிரஸ் தலைமை அலட்சியமாக உள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியில் 4 காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா.. சமாதானப்படுத்த போராடும் கட்சி
பி.கே. அனில் குமார்

கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.கே.விஸ்வநாதன், செயலாளர் எம்.எஸ்.விஷ்வாநதன், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் பி.கே.அனில் குமார் மற்றும் மகிளா காங்கிரஸ் தலைவர் சுஜாயா வேணுகோபால் ஆகியோர் கட்சியிலிருந்து விலகினர். இதில் பி.கே. அனில் குமார் எல்.ஜே.டி. கட்சியில் இணைந்தார். அம்மாநில சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கட்சியினர் விலகியது காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அடியாக கருதப்படுகிறது. ராஜினாம செய்த தலைவர்களை சமாதானப்படுத்தும் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டுள்ளதாக தகவல்.