“பைடன் எடுத்த முடிவு தவறானது; மோசமான விளைவுகள் ஏற்படும்” – இந்நாள் அதிபரை விமர்சித்த முன்னாள் அதிபர் புஷ்!

“பைடன் எடுத்த முடிவு தவறானது; மோசமான விளைவுகள் ஏற்படும்” – இந்நாள் அதிபரை விமர்சித்த முன்னாள் அதிபர் புஷ்!

ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்கா தனது படைவீரர்களை திரும்பப்பெற்று வருகிறது. ஆகஸ்ட் மாதத்துக்குள் மொத்த படை வீரர்களின் பணியும் முடிவடைவதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதனால் அந்நாட்டை பயங்கரவாத குழுவான தலிபான்கள் கைகளின் வசம் ஆப்கானிஸ்தான் மீண்டும் பிடிபட்டுள்ளது. அந்நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டி அரசின் ராணுவத்தால் தலிபான்களை எதிர்க்க முடியவில்லை.

“பைடன் எடுத்த முடிவு தவறானது; மோசமான விளைவுகள் ஏற்படும்” – இந்நாள் அதிபரை விமர்சித்த முன்னாள் அதிபர் புஷ்!

முன்பு அமெரிக்க வீரர்கள் இருந்ததால் கூட்டு சேர்ந்து திடக்காத்திரமாக எதிர்த்தார்கள். தற்போது அதற்கு வழியில்லை. ஆப்கானிஸ்தானின் வடமேற்கு பகுதியிலுள்ள படாக்ஸ்கான், கந்தகார் மாகாணங்களில் உள்ள நகரங்களைக் கைப்பற்றியிருக்கும் தலிபான்கள், நாட்டின் 85% பகுதிகளைக் கைப்பற்றிவிட்டதாக சூளுரைத்துள்ளனர். 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நியூயார்க் நகரில் அல்கொய்தா பயங்கரவாதிகள் இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்தனர். அவர்களுக்கு ஆப்கானிஸ்தானிலுள்ள தலிபான்கள் அடைக்கலம் கொடுத்தனர்.

“பைடன் எடுத்த முடிவு தவறானது; மோசமான விளைவுகள் ஏற்படும்” – இந்நாள் அதிபரை விமர்சித்த முன்னாள் அதிபர் புஷ்!

இதனால் ஆத்திரமடைந்த அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் தலிபான்கள் பக்கம் திரும்பியது. புஷ் ராட்சத பீரங்கிகளை இறக்கிவிட்டு வேடிக்கை பார்த்தார். ஆப்கானிஸ்தானில் களமிறங்கிய அமெரிக்க படை வீரர்களும் அந்நாட்டு படை வீரர்களும் இணைந்து தலிபான்களை எதிர்த்து மிகக் கடுமையாகப் போரிட்டனர். இதில் அமெரிக்க-ஆப்கான் படைகள் வெற்றிவாகை சூடியது. அதிலிருந்து தலிபான்களின் ஆதிக்கம் குறைந்ததால் கொஞ்சம் கொஞ்சமாக படைவீரர்கள் வாபஸ் பெறப்பட்டு வந்தனர்.

“பைடன் எடுத்த முடிவு தவறானது; மோசமான விளைவுகள் ஏற்படும்” – இந்நாள் அதிபரை விமர்சித்த முன்னாள் அதிபர் புஷ்!

ஒபாமா காலத்திலிருந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போதைய அதிபர் பைடன் அதே பாணியில் மொத்த படைகளையும் வாபஸ் வாங்க முடிவெடுத்துள்ளார். இதற்கு விதை போட்ட புஷ் என்ன நினைக்கிறார் என்பதை தெரிந்துகொள்ளும் வகையில் பத்திரிகை ஒன்று அவரிடம் பேட்டி கண்டது. அதற்குப் பதிலளித்த அவர், “பைடன் எடுத்த முடிவு நம்ப முடியாத அளவிற்கு மோசமான விளைவை ஏற்படுத்தும். ஆப்கனிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தியப் படைகள் வெளியேறுவது அந்நாட்டில் உள்ள பெண்கள், குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படுவதற்கு வழிவகுக்கும்” என்றார்.