தாமரைக்கு தாவிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ… சொன்னதை செய்யும் பா.ஜ.க… நெருக்கடியில் மம்தா பானர்ஜி

 

தாமரைக்கு தாவிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ… சொன்னதை செய்யும் பா.ஜ.க… நெருக்கடியில் மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் நேற்று மேலும் ஒரு திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பா.ஜ.க.வில் இணைந்தார். ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் வரிசையாக பா.ஜ.க.வுக்கு தாவுவது முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அம்மாநிலத்தில் பா.ஜ.க. குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. இது தொடர்ந்து 3வது முறையாக முதல்வராக வேண்டும் மம்தா பானர்ஜியின் கனவுக்கு பெரிய தடையாக உள்ளது. எதிர்வரும் அம்மாநில சட்டப்பேரவை தேர்தல் திரிணாமுல் காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையிலான போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாமரைக்கு தாவிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ… சொன்னதை செய்யும் பா.ஜ.க… நெருக்கடியில் மம்தா பானர்ஜி
தீபக் ஹல்தார்

இன்னும் சில மாதங்களில் அம்மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மம்தா பானர்ஜி கட்சியை சேர்ந்த தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் பா.ஜ.க.வுக்கு தாவி வருகின்றனர். மேலும், தேர்தல் சமயத்தில் மம்தா பானர்ஜி தனியாகத்தான் இருப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார். அதனை உறுதி செய்வது போல் திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்து வருகின்றனர். நேற்று முன்தினம் டைமண்ட் ஹார்பர் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தீபக் ஹல்தார், தனது பதவியை ராஜினாமா செய்ததுடன் திரிணாமுல் காங்கிரஸிலிருந்து விலகினார். நேற்று சுவேந்து ஆதிகாரி, முகுல் ராய் ஆகியோர் முன்னிலையில் தீபக் ஹல்தார் பா.ஜ.க.வில் இணைந்தார்.

தாமரைக்கு தாவிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ… சொன்னதை செய்யும் பா.ஜ.க… நெருக்கடியில் மம்தா பானர்ஜி
அமித் ஷா

பா.ஜ.க.வில் இணைந்த பிறகு தீபக் ஹல்தார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் இரண்டு முறை எம்.எல்.ஏ. ஆனால் 2017ம் ஆண்டு முதல் மக்களுக்கு ஒழுங்காக வேலை செய்ய என்னை அனுமதிக்கவில்லை. இது குறித்து கட்சி தலைமையிடம் தகவல் தெரிவித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கட்சியின் எந்தவொரு திட்டங்களும் என்னிடம் தெரிவிக்கப்படவில்லை. நான் எனது தொகுதி மக்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.