“பொறுப்பான பதவியில் இருந்தவர் இப்படி செய்யலாமா?” – மாஜி அதிமுக எம்பியை சாடிய நீதிபதிகள்!

 

“பொறுப்பான பதவியில் இருந்தவர் இப்படி செய்யலாமா?” – மாஜி அதிமுக எம்பியை சாடிய நீதிபதிகள்!

மதுரை முன்னாள் எம்பி உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “நான் மதுரை தொகுதியின் முன்னாள் எம்பியாக இருந்தேன். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நான் மதுரை கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு போட்டியிட்டேன். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் எனது அலுவலகத்தில் பணம் வைத்திருப்பதாக பொய் புகார் கொடுத்ததன் பேரில் மதுரை தல்லாகுளம் போலிஸ்சார், தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளும் சேர்ந்து எனது அலுவலகத்தில் சோதனை செய்தார்கள்.

“பொறுப்பான பதவியில் இருந்தவர் இப்படி செய்யலாமா?” – மாஜி அதிமுக எம்பியை சாடிய நீதிபதிகள்!

மாநகராட்சி ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த கட்டிடத்தில் வாடகைக்கு இருப்பதால் தேர்தல் நன்னடத்தை விதிகளின் படி கட்சிப்பணிக்கு அலுவலகத்தை தற்போது பயன்படுத்தக்கூடாது எனக்கூறி அலுவலகத்தை மாநகராட்சி அதிகாரிகள் அவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது . தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் இன்றுவரை எனது அலுவலகம் திறக்க அனுமதிக்கப்படாமல் உள்ளது . எனவே, எனது அலுவலகத்தை திறக்க மாவட்ட ஆட்சியர் மாநாகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

“பொறுப்பான பதவியில் இருந்தவர் இப்படி செய்யலாமா?” – மாஜி அதிமுக எம்பியை சாடிய நீதிபதிகள்!

விசாரணையின்போது அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வீர கதிரவன், “மனுதாரர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அலுவலக பணிக்காக மாநகராட்சி சார்பில் இடம் ஒதுக்கப்பட்டது. தற்போது அவரது பதவிக் காலம் முடிந்துவிட்டது. இருந்தும் இரண்டு வருடங்களாக தொடர்ந்து மாநகராட்சி கட்டிடத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்” என தெரிவித்தார். இதனை தொடர்ந்து நீதிபதி, “மனுதாரர் தற்போது எந்த பதவியிலும் இல்லை. சட்டப்பேரவை உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவிக்காலம் முடிந்த பின்பு அரசுக்குச் சொந்தமான இடத்திலிருந்து காலி செய்திருக்க வேண்டும்.

“பொறுப்பான பதவியில் இருந்தவர் இப்படி செய்யலாமா?” – மாஜி அதிமுக எம்பியை சாடிய நீதிபதிகள்!

ஆனால் அவரது பதவியை தவறாக பயன்படுத்தி அலுவலகத்தை தனது கட்டுபாட்டில் வைத்திருந்து உள்ளார். பொறுப்பான பதவியில் இருந்தவர்கள் இதுபோன்று எவ்வாறு செயல்படலாம்? இது ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. எனவே மனுதாரர் மதுரை மாநகராட்சியின் சொந்தமான கட்டிடத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும். வாடகை பாக்கி இருந்தால் மாநகராட்சி அதிகாரிகள் மனுதாரரிடம் முழுமையாக வசூல் செய்ய வேண்டும். மேலும் மனுதாரருக்குச் சொந்தமான பொருட்கள் அங்கு இருந்தால் அதனை எடுத்துக் கொள்வதற்கும் அனுமதி வழங்கப்படுகிறது” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.