தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ சுந்தர்ராஜன் காலமானார்!

பொருளாளராக இருந்த நிலையில் கடந்த 2011-ல் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு வென்று வெற்றிவாகை சூடினார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர் சுந்தர் ராஜன். இவர் தேமுதிகவின் பொருளாளராக இருந்த நிலையில் கடந்த 2011-ல் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு வென்று வெற்றிவாகை சூடினார்.

பின்னர் தேமுதிகவில் அதிருப்தி எம்எல்ஏவாக மாறி அதிமுகவில் தன்னை இணைத்து கொண்ட இவர், 2016 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் தேமுதிக முன்னாள் எம்எல்ஏ சுந்தர் ராஜன் உடல்நல குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Most Popular

`நள்ளிரவில் வேட்டை; சுட்டுக்கொல்லப்பட்ட வாலிபர்!’- ஊத்தரங்கரையில் நடந்த பயங்கரம்

நள்ளிரவில் மான் வேட்டைக்கு சென்ற வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஊத்தரங்கரையில் நடந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ளது இளவம்பாடி காப்புக்காடு பகுதியில் அதிகமாக மான்,...

“திருட போன இடத்தில செல்போனை விட்டு சென்ற புது திருடர்கள்” -நகைக்கடை கொள்ளையில் அன்று இரவே சிக்கினார்கள் .

தொழிலுக்கு புதுசா வந்த திருடர்கள் ஒரு நகைக்கடைக்குள் புகுந்து நகை ,பணத்தை திருடி செல்லும்போது அவர்களின் செல்போனை விட்டு சென்றதால், உடனே போலீசின் கையில் அவர்கள் சிக்கினார்கள் . டெல்லியின் உத்தம் நகர் பகுதியிலிருக்கும்...

தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி காய்கறி மற்றும் பூ மார்க்கெட் மூடல்!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட5,609 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,63,222 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின்...

உக்ரைன்: கொலைகார மகனை காப்பாற்ற சிறைக்கு சுரங்கம் அமைத்த தாய்!

உக்ரைனில் கொலை வழக்கில் சிறையில் உள்ள மகனை காப்பாற்ற 35 அடி ஆழத்துக்கு சுரங்கம் அமைத்த தாயை போலீசார் கைது செய்துள்ளனர். உக்ரைனைின் தெற்கு பகுதியில் Zaporizhia பகுதியில் உள்ள சிறைக்கு அருகே சந்தேகத்துக்கிடமான வகையில்...