Home அரசியல் "இப்போலாம் சேப்பாக்க சேகுவேராவை பார்க்க முடியலயே ஏன்? - உதயநிதியை வச்சி செய்த ஜெயக்குமார்!

“இப்போலாம் சேப்பாக்க சேகுவேராவை பார்க்க முடியலயே ஏன்? – உதயநிதியை வச்சி செய்த ஜெயக்குமார்!

சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினின் பிரச்சாரத்தைக் காட்டிலும் உதயநிதியின் பிரச்சாரம் தனிக்கவனம் பெற்றது. அவர் மதுரை எய்ம்ஸ் செங்கலைக் கொண்டு மேற்கொண்ட பிரச்சாரம் அனைவர் மத்தியிலும் வரவேற்பு பெற்றது. ஆனால் இதைவிட ஒவ்வொரு அதிமுக முன்னாள் அமைச்சருக்கும் பட்டப்பெயர் வைத்து அழைத்து பிரச்சாரம் செய்தார். இவர் ஊத அவங்க ஆட என்பது போல் ஒவ்வொரு பட்டப்பெயராக உதயநிதி சொல்ல மக்கள் அதெல்லாம் எந்த அமைச்சர்கள் என கத்தி சொல்லினர்.

"இப்போலாம் சேப்பாக்க சேகுவேராவை பார்க்க முடியலயே ஏன்? - உதயநிதியை வச்சி செய்த ஜெயக்குமார்!
Chocolate Boy, Play Boy'', அமைச்சர் ஜெயக்குமார் vs உதயநிதி... மக்கள்  கருத்து? #VikatanPollResults | Vikatan Poll regarding Minister Jayakumar  and Udhayanidhi conflict

அதில் முக்கியமானவர் ஜெயக்குமார். இவருக்கும் உதயநிதிக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தமாகவே இருக்கும். ஜெயக்குமாரை ஜெயக்குமார் என்று அழைப்பதைக் காட்டிலும் மெயின் ரோடு என்றே உதயநிதி அடிக்கடி கூறுவார். ஜெயக்குமாரும் சும்மா இல்லை செய்தியாளர்களிடம் பேசுகையில் உதயநிதியை கலாய்த்துவிடுவார். உதயநிதியை அவர் சாக்லேட் பாய் என்று சொல்ல உதயநிதியோ இவரை பிளேபாய் என்று சொல்ல தேர்தல் பிரச்சாரம் ரகளையானது.

உதயநிதி ஸ்டாலினுக்கு புது பதவி.. அண்ணா பல்கலைக் கழக ஆட்சிமன்ற உறுப்பினராக  நியமனம் | Udhayanidhi Stalin appointed as syndicate member in Anna  university - Tamil Oneindia

அதேபோன்றதொரு சம்பவம் தான் இன்று அரங்கேறியிருக்கிறது. சென்னை அண்ணா சாலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “உதயநிதி ஸ்டாலினுக்கு சட்டப்பேரவை போரடித்துவிட்டது போலும். சேப்பாக்கம் சேகுவேரா இப்போது எங்கே என தெரியவில்லை” என்றார்.

அமைச்சர் ஜெயக்குமார் எப்படிப்பட்டவர்? - திருமணம் முதல் சிந்து வரை பகிரும்  சகோதரர் | Minister jayakumar's own brother shares about the audio  controversy

ஜெயக்குமாரின் கலாய் ஒரு பக்கம் இருந்தாலும் இதன்மூலம் சமீப நாட்களாக உதயநிதி சட்டப்பேரவைக்கு ஆப்சென்ட் ஆகி வருவது என்ற செய்தி கிடைத்திருக்கிறது. திமுக ஆட்சியிலிருந்து ஒவ்வொரு நாளும் சட்டப்பேரவைக்கு முதல் ஆளாக வருகை தந்த உதயநிதி தற்போது படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால் ஆப்சென்ட் ஆகியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

"இப்போலாம் சேப்பாக்க சேகுவேராவை பார்க்க முடியலயே ஏன்? - உதயநிதியை வச்சி செய்த ஜெயக்குமார்!

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் தேஜஸ்வி யாதவ்

சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுத்த எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நடவடிக்கையில் தேஜஸ்வி யாதவ் களம் இறங்கியுள்ளார். சாதி அடிப்படையில் மக்கள்...

வருவாய் அதிகரிப்பு எதிரொலி… பாரத் போர்ஜி் லாபம் ரூ.153 கோடி….

பாரத் போர்ஜ் நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.153 கோடி ஈட்டியுள்ளது. வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமான பாரத்...

ஆல்-ரவுண்டராக அசத்திய மேக்ஸ்வெல், ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஹர்ஷல் படேல்! பெங்களூரு அணி அசத்தல் வெற்றி

நடப்பு ஐ.பி.எல் தொடரின் 39-வது லீக் ஆட்டமானது துபாய் சர்வதேச மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும்மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கிடையே நடைபெற்றது.

”எடப்பாடியை கட்சியிலிருந்து நீக்கினால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும்”

எடப்பாடி பழனிச்சாமியை கட்சியிலிருந்து நீக்கினால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும் என அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
TopTamilNews