“அந்த நிலைக்கு தள்ளாதீர்கள் ஸ்டாலின் விளைவுகள் பயங்கரமாய் இருக்கும்” – ஜெயக்குமார் எச்சரிக்கை!

“அந்த நிலைக்கு தள்ளாதீர்கள் ஸ்டாலின் விளைவுகள் பயங்கரமாய் இருக்கும்” – ஜெயக்குமார் எச்சரிக்கை!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கொண்டுவரும் திட்டங்களை முடக்கி வைப்பது, அத்திட்டங்கள் கோப்புகள் வரை மட்டுமே செயல்பட்டிருந்தால் அதனை ஓரங்கட்டுவது போன்ற செயல்கள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு கை வந்த கலை. கருணாநிதி காலத்தில் கட்டிய புதிய தலைமைச் செயலகத்தை ஜெயலலிதா மருத்துவமனையாக மாற்றியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் முதலமைச்சராக இருந்த கருணாநிதி சென்னை அண்ணா சாலையில் புதிய சட்டப்பேரவை மாளிகை கட்டப்பட்டது.

“அந்த நிலைக்கு தள்ளாதீர்கள் ஸ்டாலின் விளைவுகள் பயங்கரமாய் இருக்கும்” – ஜெயக்குமார் எச்சரிக்கை!
“அந்த நிலைக்கு தள்ளாதீர்கள் ஸ்டாலின் விளைவுகள் பயங்கரமாய் இருக்கும்” – ஜெயக்குமார் எச்சரிக்கை!

90 சதவீத வேலைப்பாடுகள் முடியும் தருணத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. ஆனால் அதற்கு முன்னதாகவே தமிழ்நாடு சட்டமன்றம் என்ற போர்டுகள் அனைத்தும் வைக்கப்பட்டு அலுவலகப் பணிகள் தொடங்கியிருந்தன. இதனை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் திறந்துவைத்தார். இதற்கான கல்வெட்டும் அதில் இடம்பெற்றிருந்தது. திறப்பு விழாவில் பங்கேற்ற சோனியா காந்தி, மன்மோகன் சிங், கருணாநிதி ஆகியோரின் பெயர்கள் அக்கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்தன. ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா முதல் வேலையாக புதிய தலைமைச் செயலகத்திற்கு நாங்கள் போக மாட்டோம் என்று கூறினார்.

“அந்த நிலைக்கு தள்ளாதீர்கள் ஸ்டாலின் விளைவுகள் பயங்கரமாய் இருக்கும்” – ஜெயக்குமார் எச்சரிக்கை!

மக்களிடம் விமர்சனங்களை வாங்கி குவிக்க கூடாது என்பதற்காக பன்னோக்கு மருத்துவமனையாக அதை மாற்றினார். உண்மையில் அது ஒரு மருத்துவமனைக்கான கட்டமைப்பு கொண்ட கட்டடமே அல்ல. இதனால் கடும் விமர்சனத்துக்குள்ளானார். குறிப்பாக அந்தக் கல்வெட்டை அகற்றி மருத்துவமனையாக்கிய கல்வெட்டு ஜெயலலிதா பெயருடன் பொருத்தப்பட்டது. தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்திருக்கும் திமுக அரசு மீண்டும் கருணாநிதி ஆட்சியில் பொருத்தப்பட்ட கல்வெட்டை பொருத்தியிருக்கிறது.

இதன்மூலம் மருத்துவமனையைத் தற்போதைய திமுக அரசு மீண்டும் தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவையாக மாற்றும் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளிவந்திருக்கிறது. இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “தொலைநோக்குப் பார்வையுடன் அதனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக ஜெயலலிதா மாற்றினார். அதனால்தான் கொரோனா காலத்தில் எவ்வளவோ உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

“அந்த நிலைக்கு தள்ளாதீர்கள் ஸ்டாலின் விளைவுகள் பயங்கரமாய் இருக்கும்” – ஜெயக்குமார் எச்சரிக்கை!

உயிர்களைக் காப்பாற்றும் அந்த மருத்துவமனையை மக்களின் விருப்பத்துக்கு மாறாக, அதிமுகவின் எண்ணத்துக்கு மாறாக, வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் அவரது தந்தை புகழ்பாடுவதற்காக ஸ்டாலின் மாற்றுகிறார். பன்னோக்கு மருத்துவமனையை மீண்டும் தலைமைச் செயலகமாக மாற்றினால் அதை எதிர்த்து பொதுமக்களைத் திரட்டி அதிமுக போராட்டம் நடத்தும். அந்த நிலைக்கு எங்களைத் தள்ளாதீர்கள்” என்றார்.