பாஜகவில் இணைகிறார் திமுக முன்னாள் எம்.பி. கே.பி. ராமலிங்கம்

பாஜகவில் இணைகிறார் திமுக முன்னாள் எம்.பி. கே.பி. ராமலிங்கம்

திமுக முன்னாள் எம்.பி. கே.பி. ராமலிங்கம் இன்று பாஜகவில் இணையவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாஜகவில் இணைகிறார் திமுக முன்னாள் எம்.பி. கே.பி. ராமலிங்கம்

மு.க. அழகிரியின் ஆதரவாளரும், திமுகவின் முன்னாள் எம்.பியுமான கே.பி. ராமலிங்கம் கடந்த ஏப்ரல் மாதம் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். கருணாநிதியின் மறைவுக்கு பிறகு திமுக தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலின் கருணாநிதி போன்று திறம்பட கட்சியை வழிநடத்த வில்லை என்று பகிரங்கமாக கூறியிருந்தார். இதனால் கே.பி. ராமலிங்கம் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டார்.

பாஜகவில் இணைகிறார் திமுக முன்னாள் எம்.பி. கே.பி. ராமலிங்கம்

இந்நிலையில் திமுகவின் முன்னாள் எம்.பி கே.பி. ராமலிங்கம் தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி. ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி முன்னிலையில் இன்று பாஜகவில் இணைகிறார். சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் காலை 11 மணிக்கு கேபி ராமலிங்கம் பாஜகவில் தன்னை இணைத்து கொள்கிறார். முன்னதாக திமுக தலைமையுடனான பிரச்சினையில் திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.