நம் நாட்டில் விலங்குகள் கொடுமைப்படுத்தும் நிகழ்வுகளுக்கு காரணம் சீனாதான்…. முன்னாள் டி.ஜி.பி. பகீர் தகவல்…

நம் நாட்டில் விலங்குகள் கொடுமைப்படுத்தும் நிகழ்வுகளுக்கு காரணம் சீனாதான்…. முன்னாள் டி.ஜி.பி. பகீர் தகவல்…

கேரளாவில் அண்மையில் கர்ப்பிணி யானைக்கு அன்னாச்சி பழத்துக்குள் வெடிபொருளை வைத்து கொடுத்து வெடிக்க வைத்து அதனை கொலை செய்தது மற்றும் கடந்த சில தினங்களுக்கு முன் இமாச்சல பிரதேசத்தில் கர்ப்பிணி பசு ஒன்றுக்கு கோதுமை மாவுக்குள் வெடிபொருளை வைத்து கொடுத்து அந்த பசுவின் வாயை படுகாயம் அடைய செய்த சம்பவங்கள் நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது போன்ற விலங்குகள் கொடுமைப்படுத்தும் நிகழ்வுகளின் பின்னணியில் சீனா உள்ளதாக முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நம் நாட்டில் விலங்குகள் கொடுமைப்படுத்தும் நிகழ்வுகளுக்கு காரணம் சீனாதான்…. முன்னாள் டி.ஜி.பி. பகீர் தகவல்…

உத்தர பிரதேசத்தின் காவல்துறை முன்னாள் டி.ஜி.பி. விக்ரம் சிங் இது தொடர்பாக கூறியதாவது: நாட்டில் விலங்குகள் மீதான தாக்குதல் அமைப்புசார்ந்த குற்றமாகி விட்டது. சீனாவில் பாரம்பரிய மருந்துகள் தயாரிக்க விலங்குகளின் பாகங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. தங்கத்தை காட்டிலும் சிங்கங்கள் அங்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆகையால் இது போன்ற சீன மோசடிகள் நம் நாட்டில் விலங்குகள் கொடுமைப்படுத்துவதன் பின்னணியில் இருக்கலாம்.

நம் நாட்டில் விலங்குகள் கொடுமைப்படுத்தும் நிகழ்வுகளுக்கு காரணம் சீனாதான்…. முன்னாள் டி.ஜி.பி. பகீர் தகவல்…

விலங்குகளுக்கு எதிரான அட்டூழியங்கள் தொடர்பாக பல சட்டங்கள் உள்ளன. இந்திய தண்டனை சட்டத்தில் ஏராளமான சட்டங்கள் உள்ளது மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் 3 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும். 1986ல் உருவாக்கப்பட்ட சட்டம், விலங்குகளின் சட்டப்பூர்வமான உரிமைகள் என்ன என்பதை வெளிப்படுத்துகிறது. சில வழக்குகளில், வனவிலங்கு அதிகாரி மற்றும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளுக்கு எதிராகவும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.