முதல்வர் உத்தவ் தாக்கரே மிரட்டுவதை நிறுத்த வேண்டும்…. தேவேந்திர பட்னாவிஸ் ஆவேசம்

 

முதல்வர் உத்தவ் தாக்கரே மிரட்டுவதை நிறுத்த வேண்டும்…. தேவேந்திர பட்னாவிஸ் ஆவேசம்

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அச்சுறுத்துவதை நிறுத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வலியுறுத்தியுள்ளார்.

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே சாம்னாவுக்கு அளித்த பேட்டியில், நாங்கள் பழிவாங்கும் அரசியலில் இறங்க விரும்பவில்லை. ஆனால் நீங்கள் (பா.ஜ.க.) எங்களை கட்டாயப்படுத்தினால், உங்கள் பழிவாங்கலுக்கு எதிராக சுதர்சன் சக்கரத்தை பயன்படுத்துவோம். அனைத்து முன்னேற்றங்களையும் நெருக்கமாகப் பின்பற்றுகிறேன். நான் அமைதியாக இருந்தால் அல்லது கட்டுப்பாடாக இருந்தால் நான் ஆளில்லாமல இருக்கிறேன் என்று அர்த்தமல்ல. தனிநபரின் குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் குறிவைக்கப்படும் விதம் மகாராஷ்டிராவின் கலாச்சாரத்திறகு பொருந்தாது. குழந்தைகளையும், குடும்பங்களையும் குறிவைப்பவர்கள் தங்களுக்கும் குடும்பம் இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் சுத்தமாக இல்லை. அரசாங்கம் மட்டுமல்ல மகாராஷ்டிரா மக்களும் இத்தகைய அரசியலை நிச்சயமாக எதிர்பார்பார்கள் என்று தெரிவித்தார்.

முதல்வர் உத்தவ் தாக்கரே மிரட்டுவதை நிறுத்த வேண்டும்…. தேவேந்திர பட்னாவிஸ் ஆவேசம்
முதல்வர் உத்தவ் தாக்கரே

முதல்வர் உத்தவ் தாக்கரேயின் பேச்சுக்கு முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது: முதல்வர் தாக்கரே அச்சுறுத்துவதை நிறுத்த வேண்டும். அதற்கு பதிலாக நிர்வாகத்தை காட்ட வேண்டும். மகாராஷ்டிராவில் இன்னும் கொரோனா வைரஸின் 2வது அலை வராதது கடவுளின் கருணை. நாங்கள் ஒரு போதும் தனிப்பட்ட தாக்குதல்களை நடத்தவில்லை. நாங்கள் தனிப்பட்ட தாக்குதல்களை பற்றி பேசுகிறோம் என்றால் சிவ சேனா தலைவர்கள் என் மனைவியை தாக்கியுள்ளனர், ஆனால் நான் அதை பற்றி ஒரு போதும் வம்பு பேசவில்லை.

முதல்வர் உத்தவ் தாக்கரே மிரட்டுவதை நிறுத்த வேண்டும்…. தேவேந்திர பட்னாவிஸ் ஆவேசம்
பாலிவுட் நடிகை கங்கனா ரானவத்

அர்னாப் கோஸ்வாமி மற்றும் கங்கனா ரனாவுத் ஆகியோரின் எண்ணங்களுக்கு நாங்கள் ஆதரவு அளிக்கவில்லை. ஆனால் அரசாங்கத்துக்கு எதிராக பேசுபவர்களை அடக்குவதற்கான அணுகுமுறைக்கு நாங்கள் எதிரானவர்கள். முதல்வர் பதவிக்கு (பா.ஜ.க.) அளித்த வாக்குறுதியை அவர்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை மறந்து விட்டார்கள். அரசாங்கம் விவசாயிகளுக்கு உதவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.