ராம் விலாஸ் பஸ்வானுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்…. குடியரசு தலைவருக்கு ஜிதன் ராம் மான்ஜி கடிதம்

 

ராம் விலாஸ் பஸ்வானுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்…. குடியரசு தலைவருக்கு ஜிதன் ராம் மான்ஜி கடிதம்

மறைந்த ராம் விலாஸ் பஸ்வானுக்கு பாரத ரத்னா வழங்கக்கோரி குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த்துக்கு ஜிதன் ராம் மான்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

லோக் ஜன்சக்தி நிறுவனரும், மத்திய அமைச்சருமான மறைந்த ராம் விலாஸ் பஸ்வானுக்கு பாரத ரத்னா வழங்கக்கோரி இந்துஸ்தானி அவாம் மோர்சா கட்சியின் தலைவரும், பீகாரின் முன்னாள் முதல்வருமான ஜிதன் ராம் மான்ஜி குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ராம் விலாஸ் பஸ்வானுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்…. குடியரசு தலைவருக்கு ஜிதன் ராம் மான்ஜி கடிதம்
ராம் விலாஸ் பஸ்வான்

ஜிதன் ராம் மான்ஜி, குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த்துக்கு எழுதிய கடிதத்தில், லோக் ஜன்சக்தி நிறுவனர் ராம் விலாஸ் பஸ்வானுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். மேலும், தேசிய தலைநகர் டெல்லியில் பஸ்வான் வசித்த 12, ஜன்பத் வீட்டை நினைவகமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

ராம் விலாஸ் பஸ்வானுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்…. குடியரசு தலைவருக்கு ஜிதன் ராம் மான்ஜி கடிதம்
குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த்

ஜிதன் ராம் மான்ஜி தனக்கும் லோக் ஜன்சக்திக்கும் இடையிலான மோதலை ஒதுக்கிவைத்து விட்டு, ராம் விலாஸ் பஸ்வானுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. ராம் விலாஸ் பஸ்வானின் இறுதி சடங்கு நேற்று முழு அரசு மரியாதையுடன் நடந்தது. இறுதி சடங்கில் ஏராளமான அரசியல் தலைவர்கள், ராம் விலாஸ் பஸ்வானின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.