பிரதமர் கூட்டத்தைப் புறக்கணித்த முன்னாள் தலைமை செயலருக்கு சிறை தண்டனை?

 

பிரதமர் கூட்டத்தைப் புறக்கணித்த முன்னாள் தலைமை செயலருக்கு சிறை தண்டனை?

மேற்கு வங்க அரசியலில் யாஸ் புயலை விட அதிவேகமான புயல் வீசிக் கொண்டிருக்கிறது. பிரதமர் கூட்டத்தில் மையம் கொண்ட புயல் நிற்காமல் சுழற்றி சுழற்றி அடிக்கிறது. மத்திய, மாநில அரசுகளுக்கிடையேயான ஈகோவே இந்தப் புயலுக்கு காரணமாகக் கூறப்படுகிறது. கூட்டத்தில் கலந்துகொள்ளாததற்கு தக்க காரணத்தைக் கூறி தன் பக்கம் இருக்கும் நியாயத்தை மம்தா எடுத்துரைக்கிறார். ஆனால் அவருக்கு ஈகோ அதிகமாக இருப்பதாக ஆளுநர் ஜெகதீப் தங்கர் குற்றஞ்சாட்டுகிறார். மம்தாவோ மக்களின் நலனுக்காக பிரதமரின் ஈகோவை போக்க காலில் விழ கூட தயார் என்கிறார்.

பிரதமர் கூட்டத்தைப் புறக்கணித்த முன்னாள் தலைமை செயலருக்கு சிறை தண்டனை?

இரு பக்கத்திற்கு நடுவில் மாற்றிக்கொண்டு விழிப்பது என்னவோ முன்னாள் தலைமைச் செயலரான அலபன் பண்டோபாத்யாயா தான். மம்தா பேச்சை கேட்பதா, மத்திய அரசின் உத்தரவை ஏற்பதா என குழம்பி போய் விட்டார் என்றே சொல்ல வேண்டும். கூட்டத்தை மதிக்காமல் போனதால் அலபனை மத்திய அரசுப் பணிக்கு அனுப்பிவைக்குமாறு மம்தாவுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இது அரசியல் பழிவாங்கும் செயல் என கூறிய மம்தா, “மிஸ்டர் பிஸி பிரதமர் உங்களால் என்னை எதுவும் செய்ய முடியாது” என்று ஆவேசமாகப் பேசினார். மேலும் அலபனை அனுப்பிவைக்கமால் தனது ஆலோசகராக நியமித்தார்.

பிரதமர் கூட்டத்தைப் புறக்கணித்த முன்னாள் தலைமை செயலருக்கு சிறை தண்டனை?

இந்த ட்விஸ்ட்டை எதிர்பாராத மத்திய அரசு உடனடியாக பிரதமர் கூட்டத்தைப் புறக்கணித்தது ஏன் என்பதற்கான விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸில், பேரிடர் மேலாண்மை சட்டப்பிரிவு 51 (b)-இன் படி உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது குறித்து விளக்கமளியுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்தச் சட்டப்பிரிவே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மூன்று நாட்களுக்குள் விளக்கமளிக்கவில்லை என்றால் இந்தப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி என்ன கூறுகிறது இந்தப் பிரிவு.

பிரதமர் கூட்டத்தைப் புறக்கணித்த முன்னாள் தலைமை செயலருக்கு சிறை தண்டனை?

2004ஆம் ஆண்டு சுனாமிக்கு பிறகு பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அவ்வாறு கொண்டுவரப்பட்ட பின் கொரோனா பரவலுக்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் தான் இந்தியாவில் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டது. இந்தச் சட்டத்திலுள்ள 51 (b) பிரிவின்படி மத்திய அரசோ அல்லது மாநில அரசோ உத்தரவிட்டால் அதை அனைத்து அதிகாரிகளும் பின்பற்ற வேண்டும். பின்பற்ற தவறினால் 1 வருடம் சிறை தண்டனை விதிக்கப்படலாம் அல்லது அபராதம் விதிக்கப்படலாம் அல்லது இரண்டுமே சேர்த்து தண்டனை வழங்கலாம். இதன் காரணமாகவே அலபன் கைதாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.