சிறுமி பாலியல் வழக்கில் சிக்கிய முன்னாள் அதிமுக எம்எல்ஏ… போக்சோ வழக்கை ரத்துசெய்யக் கோரி மனு!

சிறுமி பாலியல் வழக்கில் சிக்கிய முன்னாள் அதிமுக எம்எல்ஏ… போக்சோ வழக்கை ரத்துசெய்யக் கோரி மனு!

கடந்த ஆண்டு நாகர்கோவில் கோட்டாரைச் சேர்ந்த 15 வயது சிறுமி வாலிபர் ஒருவருடன் மாயமானார். அது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இருவரையும் மீட்டு விசாரித்தனர். விசாரணையில் காதலனுடன் அந்த சிறுமி வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிகிறது. அவரை கண்டுபிடித்து போலீசார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

சிறுமி பாலியல் வழக்கில் சிக்கிய முன்னாள் அதிமுக எம்எல்ஏ… போக்சோ வழக்கை ரத்துசெய்யக் கோரி மனு!

கடந்த சில ஆண்டுகளாக தனது தாயாரின் ஒப்புதலுடன் பலர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறியிருந்தார். அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் உட்பட சிலர் தனக்கு பாலியல் ரீதியிலாக தொல்லை கொடுத்து வந்தனர் என்றும் தனது தாயாரின் உவியுடன் 2 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தொந்தரவை அனுபவித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் மீது போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர்.

சிறுமி பாலியல் வழக்கில் சிக்கிய முன்னாள் அதிமுக எம்எல்ஏ… போக்சோ வழக்கை ரத்துசெய்யக் கோரி மனு!

இதற்குப் பின் அவரை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி அதிமுக தலைமை உத்தரவிட்டது. இதையடுத்து ஜாமின் கோரி நாஞ்சில் முருகேசன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் மறுப்பு தெரிவித்த நீதிபதி ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்தார். இச்சூழலில் தன் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்யக்கோரி நாஞ்சில் முருகேசன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து நாகர்கோயில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.