14 நாட்களாக கிராம மக்களை அச்சுறுத்தி வந்த காட்டுயானை… மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்…

 

14 நாட்களாக கிராம மக்களை அச்சுறுத்தி வந்த காட்டுயானை… மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்…

தருமபுரி

பென்னாகரம் அருகே கடந்த 14 நாட்களாக கிராம மக்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை கொம்பன் காட்டுயானையை இன்று வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பதனூர் காப்புக்காட்டில் இருந்து வெளியேறிய ஒற்றை கொம்பான் காட்டுயானை, வனத்தை ஒட்டியுள்ள நெருப்பூர் காந்திநகர் பகுதியில் கடந்த 2 வார காலமாக சுற்றித்திரிந்து. விளை நிலங்களை சேதப் படுத்தியும், பொதுமக்களை அச்சுறுத்தியும் வந்த அந்த யானையை, வனத்துக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சி செய்து வந்தனர்.

14 நாட்களாக கிராம மக்களை அச்சுறுத்தி வந்த காட்டுயானை… மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்…

ஆனால், யானை கிராமத்தை விட்டு வெளியேறாததால், அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தீர்மானிப்பட்டது. அதன்படி இன்று காலை மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார், பென்னாகரம் வனச்சரக அலுவலர் முருகன் மற்றும் வனத்துறை கால்நடை மருத்துவக் குழுவினர், யானையை முத்தையன் கோவில் அணை பகுதிக்கு விரட்டிச் சென்றனர்.

பின்னர், அங்கு யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. நீண்ட நேரம் காத்திருந்த பின்பு மயங்கிய நிலையில் இருந்த, அந்த ஒற்றை கொம்பன் யானை ஜேசிபி இயந்திரம் உதவியுடன் வனத்துறை வாகனத்தில் ஏற்றினர். இதனை தொடர்ந்து, பிடிபட்ட யானை அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் என மாவட்ட வன அலவலர் ராஜ்குமார் தெரிவித்தார்.