குழந்தை போல அடம்பிடித்த யானை : பேசியே காட்டுக்குள் அனுப்பி வைத்த வனத்துறையினர்!

 

குழந்தை போல அடம்பிடித்த யானை : பேசியே காட்டுக்குள் அனுப்பி வைத்த வனத்துறையினர்!

வால்பாறை அருகே காட்டுக்குள் செல்லாமல் அடம் பிடித்த காட்டு யானையிடம், பேசிய வனத்துறையினர் காட்டுக்குள் அனுப்பி வைத்த சம்பவம் சுவாரஸ்யமாக இருந்துள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் குளிர் காலத்தில் யானை நடமாட்டம் அதிகமாக இருப்பது வழக்கமான ஒன்று. இந்த ஆண்டும் அதே நிலை தான். ஸ்டேன்மோர் எஸ்டேட் பகுதியில் 2 காட்டு யானைகள் சுற்றித் திரிந்துள்ளது. அதனைக் கண்ட வனத்துறையினர், காட்டுக்குள் விரட்டியடிக்க முயன்றுள்ளனர். அப்போது அவர்கள், யானையை பார்த்து கத்தியதால் ஒரு யானை மட்டும் அங்கிருந்து சென்றுள்ளது. மற்றொரு யானை, அங்கிருந்து செல்லாமல் அடம் பிடித்துக் கொண்டே இருந்துள்ளது.

குழந்தை போல அடம்பிடித்த யானை : பேசியே காட்டுக்குள் அனுப்பி வைத்த வனத்துறையினர்!

காலை உதைத்துக் கொண்டும், கோபத்துடன் பிளிறியும் சிறுவன் போல நடந்து கொண்டதை பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்ததாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். ஒரு கட்டத்தில், அந்த யானை வனத்துறையினரை துரத்த ஆரம்பித்துள்ளது. பயந்து ஓடிய வனத்துறையினர் சிறிது தூரம் சென்ற பிறகு, யானையுடன் பேசியே மீண்டும் காட்டுக்குள் அனுப்பி வைத்துள்ளனர். குழந்தை போன்று கோபமடைந்த அந்த யானை, திரும்பச் செல்லும் போது அங்கிருந்த செடிகளை முட்டிவிட்டு காட்டுக்குள் சென்றது வனத்துறையினரை உருக்க வைத்துள்ளது.