”இனி மிலிட்டரி கேண்டீனில் வெளிநாட்டு மது வகைகள் கிடைக்காது?”

 

”இனி மிலிட்டரி கேண்டீனில் வெளிநாட்டு மது வகைகள் கிடைக்காது?”

வெளிநாடுகளில் முற்றிலும் தயாரித்து, இந்தியாவிற்குள் இறக்குமதியாகும் பொருட்களை மிலிட்டரி கேண்டீன்களில் விற்பனை செய்ய அரசு தடை விதிக்க முடிவு செய்துள்ளது.

”இனி மிலிட்டரி கேண்டீனில் வெளிநாட்டு மது வகைகள் கிடைக்காது?”

இதன் காரணமாக, ராணுவத்திற்கு சொந்தமான கேண்டீன்களில் இனி, வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட முழுமையான இறக்குமதி பொருட்கள் எதையும் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எப்எம்சிஜி முதல் நுகர்வோர் பொருட்கள் வரை அனைத்து பொருட்களும் இதில் அடங்கும். குறிப்பாக மிலிட்டரி கேண்டீன்களில் விற்பனையாகும் வெளிநாட்டு மதுபானங்களும் இனி விற்பனை செய்யப்பட மாட்டாது என தெரிகிறது.

உதாரணமாக ஸ்காட்லாந்து நாட்டில் தயாரிக்கப்பட்டு இறக்குமதியாகும் ஸ்காட்ச் இனி மிலிட்டரி கேண்டீன்களில் விற்பனைக்கு கிடைக்காது. அதே சமயம், மதுபானம் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு அவை இறக்குமதி செய்யப்பட்டு பின்னர் மதுபானம் இங்கு தயாரிக்கப்பட்டால் அவை தொடர்ந்து விற்பனைக்கு கிடைக்கும் என தெரிகிறது. எனவே முழுவதுமாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இறக்குமதியாகும் பொருட்கள் இனி மிலிட்டரி கேண்டீனில் வாங்க முடியாது என்பது தெரியவந்துள்ளது.

இதனிடையே, மிலிட்டரி கேண்டீன்களில் விற்பனையாகும் 5,500 பொருட்களில் 420 பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் என கூறப்படுகிறது. இதில், கழிவறை பிரஷ்கள், சான்ட்விச் டோஸ்டர்கள், லேப்டாப் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் சீனாவில் இருந்து இறக்குமதியாகி மிலிட்டரி கேண்டீனில் விற்பனையாவதாக கூறப்படுகிறது. உள்நாட்டில் உற்பத்தி என்ற மத்திய அரசின் திட்டத்தை ஊக்கப்படுத்தும் விதமாக ராணுவ துறையால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிகிறது.

  • எஸ். முத்துக்குமார்