இந்த ஆண்டு டெல்லி செங்கோட்டையில் முற்றிலும் மாறுப்பட்ட சுதந்திர தின கொண்டாட்டங்களை இந்தியா காணும்

இந்த ஆண்டு டெல்லி செங்கோட்டையில் முற்றிலும் மாறுப்பட்ட சுதந்திர தின கொண்டாட்டங்களை இந்தியா காணும்

டெல்லி செங்கோட்டையில் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 15ம் தேதியன்று நடைபெறும் இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்களை பல ஆயிரம் நேரில் பார்வையிடுவர். மேலும் டி.வி.யில் பல கோடி பேர் பார்ப்பா். ஆனால் இந்த ஆண்டு கோவிட்-19 தொற்றுநோய் பரவல் காரணமாக, இந்திய வரலாற்றில் முதல் முறையாக டெல்லி செங்கோட்டையில் முற்றிலும் வித்தியாசமான சுதந்திர தின கொண்டாட்டங்களை இந்தியா காண உள்ளது.

இந்த ஆண்டு டெல்லி செங்கோட்டையில் முற்றிலும் மாறுப்பட்ட சுதந்திர தின கொண்டாட்டங்களை இந்தியா காணும்

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 20 சதவீத வி.வி.ஐ.பி.க்கள் அல்லது இதர பங்கேற்பாளர்கள் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடியின் உரையை நேரடியாக காண முடியும். மேலும் பள்ளி குழந்தைகள், என்.சி.சி. மாணவர்கள் டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளமாட்டார்கள். அதேபோல், பிரதமர் உரை நிகழ்த்தும் மேடை பகுதியில், முந்தைய காலங்களை போல் வி.வி.ஐ.பி.களால் அமர முடியாது. இரு புறமும் 900 வி.வி.ஐ.பி.க்கள் அமர்ந்து இருப்பர். ஆனால் இந்த முறை சுமார் 100 பேர் மட்டுமே கலந்து கொள்வர்.

இந்த ஆண்டு டெல்லி செங்கோட்டையில் முற்றிலும் மாறுப்பட்ட சுதந்திர தின கொண்டாட்டங்களை இந்தியா காணும்

முக்கியமாக இந்த ஆண்டு கொரோனா வைரஸிலிருந்து மீண்ட 1,500 பேர் சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். கடந்த ஆண்டு வரை ஆண்டு தோறும் சுமார் 10 ஆயிரம் பேர் பிரதமர் உரையை நேரடியாக பார்ப்பதற்காக சுதந்திர கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். பாதுகாப்பு துறை செயலாளர் அஜய் குமார் மற்றும் ஏ.எஸ்.ஐ. இயக்குனர் ஜெனரல் ஏற்கனவே கடந்த வாரம் செங்கோட்டைக்கு சென்று விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். ஏற்பாடுகளை பார்வையிட்ட அஜய் குமார், சமூக விலகலை மனதில் வைத்து ஏற்பாடுகளை செய்யுமாறு சம்பந்த அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.