விளம்பரத்திற்காக வழக்கு தொடர்ந்தாக கூறி நடிகையின் வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

 

விளம்பரத்திற்காக வழக்கு தொடர்ந்தாக கூறி நடிகையின் வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

இந்தியாவில் 5ஜி இணைய சேவையை கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்து பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

விளம்பரத்திற்காக வழக்கு தொடர்ந்தாக கூறி நடிகையின் வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள 5 ஜி தொழில்நுட்பமானது மனிதர்களுக்கு மிகவும் கேடு விளைவிக்கும் என்பதால் அதை கொண்டுவர தடைவிதிக்க வேண்டும் என பாலிவுட் நடிகையும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான ஜூஹி சவுலா டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “5 ஜி தொழில்நுட்பத்தில் உருவாகும் கதிரியக்கம், மக்களின் உடல்நலத்திற்கும், பாதுகாப்பிற்கும் மிகவும் ஆபத்தை விளைவிக்கும் என நம்ப தேவையான காரணங்கள் உள்ளது. தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு தாம் எதிரி அல்ல. அதே நேரம் 5ஜி தொழில்நுட்பம் மனிதர்களுக்கும், எல்லாவிதமான உயிரினங்களுக்கும் பாதுகாப்பானது என்பதை சம்பந்தப்பட்ட துறையினர் சான்றளிக்க வேண்டும் என்பதற்காக இந்த வழக்கை தொடுத்துள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜூஹி சாவ்லாவின் வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், இந்த வழக்கு விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்பட்டதாக கூறி தள்ளுபடி செய்ததுடன் நடிகை ஜூஹி சாவ்லாவுக்கு 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர். அத்துடன் காணொலி வாயிலாக விசாரித்தபோது, ஜூஹி சாவ்லாவின் ரசிகர் ஒருவர், அவர் நடித்த படத்தின் பாடலை பாடத் தொடங்கினார். இதனால் விசாரணை பாதிப்படைந்தது.