ஏழை பிராமண அர்ச்சகரை திருமணம் செய்யும் பெண்ணுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி!

ஏழை பிராமண அர்ச்சகரை திருமணம் செய்யும் பெண்ணுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி!

பிராமண மாணவர்களின் கல்வி உதவிக்காக ரூ .14 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

ஏழை பிராமண அர்ச்சகரை திருமணம் செய்யும் பெண்ணுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி!

2 திருமண திட்டங்களுக்கு அரசிடமிருந்து கர்நாடக மாநில பிராமண மேம்பாட்டு வாரியம் ஒப்புதலை பெற்றுள்ளது. கர்நாடகாவில் சுமார் 6 கோடி மக்கள் தொகையினர் இருக்கும் நிலையில், இதில் 3% பேர் பிராமணர்களாக உள்ளனர்.இதில் ஏழை பிராமண அர்ச்சகர்களை திருமணம் செய்யும் 25 பிராமண பெண்களுக்கு ரூ. 3 லட்சம் மதிப்புள்ள சொத்தின் நிதி பத்திரங்கள் கொடுக்கப்படும் என்றும் பொருளாதார வகையில் பின்தங்கிய 550 பெண்களின் திருமணத்திற்கு தலா ரூ .25,000 உதவி வழங்குதல் உள்ளிட்ட திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அத்துடன் அருந்ததி மற்றும் மைத்ரேய் ஆகிய திட்டங்களுக்கும் நிதியுதவி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏழை பிராமண அர்ச்சகரை திருமணம் செய்யும் பெண்ணுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி!

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி இந்த திட்டத்திற்காக ரூ. 25 கோடி ஒதுக்கிய நிலையில், இதற்கான வாரியம் பாஜக ஆட்சிக்கு வந்ததும் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.