வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத ஆறு உணவுகள்!

 

வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத ஆறு உணவுகள்!

நம் உடலுக்கு ஏற்ற, சரியான உணவை சாப்பிட வேண்டும் என்பதுதான் நம்முடைய விருப்பம். காலையில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுதான் அன்றைய முழு நாளுக்கான அடிப்படையாக அமைகிறது. இரவு சாப்பிட்ட பிறகு தூங்கச் செல்கிறோம், 10, 12 மணி நேரத்துக்கு எதுவும் சாப்பிடாமல் வயிறு காலியாக இருக்கும். இந்த நிலையில் வெறும் வயிற்றில் எடுக்கக் கூடாத உணவுகள் என்று பல உள்ளன. அவற்றில் ஆறு உணவுகளை மட்டும் பார்ப்போம்!

வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத ஆறு உணவுகள்!

இன்றைக்கு காலையில் எழுந்ததும் பலருக்கும் பிரஷ் செய்வதற்கு முன்பு காபி ரெடியாக இருக்க வேண்டும். வெறும் வயிற்றில் காபி குடிப்பது நல்லது இல்லை என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

வெறும் வயிற்றில் காப்பி குடிப்பது வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிப்புக்குக் காரணமாகிவிடுகிறது. உணவை செரிக்க அடர் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்க ஆரம்பிக்கிறது. எனவே, வெந்நீர் அருந்திவிட்டு காபி குடிக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

வெறும் வயிற்றில் எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் அமிலம் நிறைந்த பழங்களை எடுத்துக்கொள்ளக் கூடாது. இவையும் வயிற்றில் அமில சுரப்பை அதிகரித்துவிடும். அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் ஃபிரக்டோஸ் உள்ள உணவுகள் செரிமானத்தின் செயல்திறனைக் குறைத்துவிடும். எனவே, வெறும் வயிற்றில் சிட்ரஸ் பழங்கள், கொய்யா போன்ற நார்ச்சத்து நிறைந்த பழங்களை எடுக்கக் கூடாது.

வெறும் வயிற்றில் வாழைப்பழத்தைச் சாப்பிடக் கூடாது. வாழையில் மக்னீஷியம் அளவு அதிகமாக உள்ளது. அது உடலில் மக்னீஷியம் மற்றும் கால்சியத்தின் சம நிலையை பாதிப்படையச் செய்துவிடும். மேலும் இது இதயத்தின் செயல்பாட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

வெறும் வயிற்றில் காரமான உணவுகள் சாப்பிடக் கூடாது. அதிகப்படியான காரணம் அமிலத்துடன் இணையும்போது வயிறு பிடிப்பு போன்ற பிரச்னைகள் வரும். இதனால் வயிறு அசௌகரியம், எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

வெறும் வயிற்றில் கார்பனேட்டட் பானங்களை அருந்தக் கூடாது. கார்பனேட்டட் அமிலம் வயிற்றில் சுரக்கும் அமிலத்துடன் இணையும் போது குமட்டல், காற்று பிரிதல் போன்ற பிரச்னையை ஏற்படுத்தும். அதே போல் வெறும் வயிற்றில் குளிர்ச்சியான ஜூஸ், மில்க் ஷேக் போன்றவற்றையும் எடுக்கக் கூடாது. அது உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தைப் பாதித்துவிடும்.