தொப்பையைக் குறைக்கும் சுண்டைக்காய்!

 

தொப்பையைக் குறைக்கும் சுண்டைக்காய்!

பைசா பொறாத விஷயங்களை ‘சுண்டைக்காய் சமாசாரம்’ என்று சொல்வதைப் போல சுண்டைக்காய் அப்படியெல்லாம் அலட்சியப்படுத்தக் கூடிய காய் கிடையாது.  காய்கறிகளில் மிகவும் சிறியதாக இருந்தாலும், ஊட்டச் சத்துக்களின் மொத்த உருவமாக தன்னுள் அடக்கியிருக்கிறது சுண்டைக்காய். தொப்பையைக் குறைக்க ட்ரெட் மில்லில் ஓடிக் கொண்டிருப்பவர்களுக்கும், சோம்பல் தவிர்த்து அதிகாலையில் எழுந்து நாய்க்குட்டியுடன் வாக்கிங் போகிறவர்களுக்கும் சுண்டைக்காய் ஒரு வரபிரசாதம் தான்.

தொப்பையைக் குறைக்கும் சுண்டைக்காய்!

பைசா பொறாத விஷயங்களை ‘சுண்டைக்காய் சமாசாரம்’ என்று சொல்வதைப் போல சுண்டைக்காய் அப்படியெல்லாம் அலட்சியப்படுத்தக் கூடிய காய் கிடையாது.  காய்கறிகளில் மிகவும் சிறியதாக இருந்தாலும், ஊட்டச் சத்துக்களின் மொத்த உருவமாக தன்னுள் அடக்கியிருக்கிறது சுண்டைக்காய். தொப்பையைக் குறைக்க ட்ரெட் மில்லில் ஓடிக் கொண்டிருப்பவர்களுக்கும், சோம்பல் தவிர்த்து அதிகாலையில் எழுந்து நாய்க்குட்டியுடன் வாக்கிங் போகிறவர்களுக்கும் சுண்டைக்காய் ஒரு வரபிரசாதம் தான். உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதில் தொடங்கி கெட்ட கொழுப்பைக் கரைப்பது வரை உடலுக்குள் எல்லா பெரிய வேலைகளையும் செய்யும் சக்தி இந்த சிறிய சுண்டைக்காய்க்கு உண்டு. 

வைட்டமின்கள் ஏ,சி,இ போன்ற சத்துக்களை எக்கச்சக்கமாக தன்னுள்ளே வைத்திருக்கிற சுண்டைக்காய் நீரிழிவு, இதய நோய் எல்லாவற்றுக்கும் ஏதுவான தீர்வாக இருக்கிறது. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கிய தேவையான வைட்டமின் சி-யை அதிகமாகக் கொண்டது. ஆரஞ்சு, கொய்யா, பப்பாளி போன்ற பழங்களுக்கு நிகரான விட்டமின்-சி சுண்டைக்காயில் உண்டு.  ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதைத் தவிர்க்கும் சக்தி சுண்டைக்காய்க்கு  உண்டு. வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது.  

சுண்டைக்காயில் உள்ள இரும்புச் சத்து, ரத்த சோகையை எதிர்த்து போராடக்கூடியது. தையமின், ரிபோஃப்ளேவின், வாய் புண்களையும் சொத்தைப்பல் உருவாவதையும் தடுக்ககூடியது.  நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுக்ககூடியது. பார்வைத்திறன் அதிகரிக்கவும், நினைவாற்றல் கூடவும், இது உதவும்.  பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டின் ஒரு பகுதியாக ‘அங்காயப் பொடி’ என ஒன்று கொடுப்பார்கள். அதில் பிரதானமக சேர்கக்ப்படுவதே சுண்டைக்காய் தான்.  தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி , உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது.  

belly fat

உணவின் மூலம் நம் உடலுக்குள்சேர்கிற கிருமிகள் அமைதியாக உடலுக்கு உள்ளேயே தங்கியிருந்து பல பாதிப்புகளை உருவாக்கலாம். அடிக்கடி சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு இந்த நச்சுக் கிருமிகள் உடலில் தங்குவது தவிர்க்கப்படும்.  சுண்டைக்காயை உலர்த்திப் பொடியாக்கி தினம் சிறிதளவு தண்ணீரில் கரைத்துக் குடித்து வந்தால், ஆசனவாய்த் தொற்றும், அதன் விளைவாக உண்டாகிற அரிப்பும் குணமாகும்.  வாரத்தில் 4 நாட்களுக்கு சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு, ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும்.  சுண்டைக்காயைக் காய வைத்து, வற்றலாக்கி, சில துளிகள் எண்ணெய் விட்டு, வறுத்து சூடான சாதத்தில், பொடித்துச் சேர்த்து, ஒரு கவளம் சாப்பிட அஜீரணக் கோளாறுகள் குணமாகும்.  வாயுப் பிடிப்பு பிரச்சினை உள்ளவர்களுக்கும் சுண்டைக்காய் நல்ல மருந்து.  பச்சை சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் பலப்படுமென்பது பெண்களுக்கு நல்லது.  பக்கவாதம் பாதித்தவர்களுக்குக்கூட சுண்டைக்காய் மெல்ல மெல்ல நிவாரணம் தரும் .   எனவே இனிமேலாவது சுண்டைக்காய் விஷயம் என்று ஏளனம் பேசாமல், உணவில் அடிக்கடி சுண்டைக்காயை பயன்படுத்தி பலனடையுங்கள்!