செட்டிநாடு ஸ்பெஷல்: கொத்மல்லி இளங் குழம்பு
Feb 16, 2019, 17:21 IST1550317876000
சுவையான செட்டிநாடு கொத்மல்லி இளங் குழம்பு எப்படி செய்வது என்பதை இதில் பார்க்கலாம்
சுவையான செட்டிநாடு கொத்மல்லி இளங் குழம்பு எப்படி செய்வது என்பதை இதில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கெட்டி பருப்பு தண்ணீர் – 4 டம்ளர்
மல்லி பொடியாக நறுக்கியது- 150 கிராம்
சின்ன வெங்காயம்- 50 கிராம்
புளிப்பு தக்காளி-100 கிராம்
சீரகம் -1 டீஸ்பூன்
பச்சை மிளகாய்- 4
நெய்- 2 டீஸ்பூன்
செய்முறை:
சின்ன வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய்,கொத்தமல்லி பொடியாக நறுக்கி, தண்ணீரில் போட்டு சீரகம், உப்பு சேர்த்து அடுப்பில் ஏற்றி ஒரு கொதி வந்ததும் நெய் ஊற்றி இறக்கவும்.