சுண்டைக்காய் கூட்டு

சுண்டைக்காய் கூட்டு

சுண்டைக்காயை விரும்பிச் சாப்பிடும் குழந்தைகளைக் காண்பது அரிது. ஆனாலும், சுண்டைக்காயில் இருக்கும் அபரிமிதமான சத்துக்களை எப்படி குழந்தைகளுக்கு சேர்ப்பது. சுண்டைக்காய் கூட்டு வைத்து, அவர்களை சாப்பிட பழக்கப்படுத்துங்கள். வயிற்றில் இருக்கும் நோய் கிருமிகளையும், அவர்களின் பசியை மறக்கடிக்கும் நாடாப் புழுக்களையும் அழிக்கும் சக்தி சுண்டைக்காய்க்கு உண்டு.

தேவையான பொருட்கள்
சுண்டைக்காய்         -100கிராம்
தேங்காய்                  -1/4மூடி
புளி                       -சிறிது
சின்னவெங்காயம்          -10
காய்ந்த மிளகாய்                -2
பெருங்காயத் தூள்      -சிறிதளவு
உப்பு, எண்ணெய்       -தேவையான அளவு
கறிவேப்பிலை        -சிறிது

செய்முறை

சுண்டைக்காயை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாயை நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு புளியை கெட்டியாக  கரைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போடவும். இப்போது வெங்காயத்தை இவற்றுடன் சேர்த்து நன்றாக வதங்கியவுடன் சுண்டைக்காயை கலந்து  விடவும்.
சுண்டைக்காய் பாதி வெந்த நிலையில் இதனுடன் பெருங்காயத்தையும், உப்பையும் சேர்க்க வேண்டும். நன்றாக வெந்தவுடன் தேங்காயை அரைத்து விடவும். ஒரு கொதி வந்தவுடன் சூடாகப் பரிமாறலாம்.