உப்புமாக்களில் எவ்வளவோ வெரைட்டி சாப்பிட்டுருப்பீங்க… இந்த உப்புமா சாப்பிட்ருக்கீங்களா!?

உப்புமாக்களில் எவ்வளவோ வெரைட்டி சாப்பிட்டுருப்பீங்க… இந்த உப்புமா சாப்பிட்ருக்கீங்களா!?

பிரட் ஆம்லெட்,பர்கர்,ஸாண்டவிச் என்று பிரட்டில் தயாரிக்கப்படும் உணவு ஐட்டங்களின் வகைகளை எழுத ஆரம்பித்தால்,அதுக்கு மட்டுமே ஒரு குட்டி புத்தகம் எழுதிறலாம்கிற அளவுக்கு ஏகப்பட்ட வெரைட்டி இருக்கு! அந்த வரிசையில் ‘பிரட் உப்புமா’ என்றொரு ஐட்டம் கேள்விப்பட்டிருக்கிங்கலா… கேள்விப்படலேன்னாலும் பரவாயில்லை!வித்தியாசமான இந்த பிரட் உப்புமா சுலபத்தில் செய்யக்கூடியது.

bread upma

தேவையான பொருட்கள்

இஞ்சி – அறை இஞ்ச்(நறுக்கியது)
வெங்காயம் – 1 (நறுக்கியது)
பச்சைமிளகாய் – 2
பிரெட் – 6 துண்டு
கரம் மசாலா தூள் – 1 tsp
மஞ்சள் தூள் – 1/4 tsp
மிளகாய்த்தூள் – 1/2 tsp
வெண்ணை – 3 tsp
கருவேப்பிலை – 3 இலை
கடுகு – 1 tsp
உ.பருப்பு – 1 tsp
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

ஒரு பிரட்டை எடுத்து 9 சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை போடவும். உளுத்தம் பருப்பை பொன்னிறமாக வந்தவுடன் நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்க்கவும்.வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பச்சைமிளகாயை சேர்க்கவும்.

upma

இத்துடன் பிரட் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறவும்.இப்போது கரம் மலா, மஞ்சள் தூள்,மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்க்கவும்.நன்றாக கிளறி தேவையான உப்பை சேர்க்கவும்.ருசியான சுவையான பிரட் உப்புமா ரெடி!

இதையும் படிங்க: கானாடுகாத்தான் போனீங்கன்னா காசு செலவானாலும் பரவாயில்ல…இந்த ஹோட்டலை மிஸ் பண்ணிராதீங்க!