“ஒரே நாளில் கொரோனா குணமடையும்” : மூலிகை மைசூர்பா கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் ஆய்வு!

“ஒரே நாளில் கொரோனா குணமடையும்” : மூலிகை மைசூர்பா கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் ஆய்வு!

இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 7,42,417 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,18,594 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,636 ஆக அதிகரித்துள்ளது.

“ஒரே நாளில் கொரோனா குணமடையும்” : மூலிகை மைசூர்பா கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் ஆய்வு!

இதையடுத்து ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா என்ற பெயரில் கோவையில் விளம்பரம் செய்யப்பட்டு வந்தது. கோவை சின்னியம்பாளையம் பகுதியில் இயங்கி வரக்கூடிய ஸ்வீட் கடை 19 மூலிகைகள் கொண்டு சித்த மருத்துவ முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை மைசூர்பா கொரோனாவை ஒரே நாளில் குணப்படுத்தும் என நோட்டீஸ் அடித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சித்த மருத்துவ முறை கொரோனாவை கட்டுப்படுத்தும் சித்த மருத்துவர்கள் கூறி வரும் நிலையில் மூலிகை மைசூர்பா கோவையில் பிரபலமாகியது.

“ஒரே நாளில் கொரோனா குணமடையும்” : மூலிகை மைசூர்பா கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் ஆய்வு!
இந்நிலையில் மூலிகை மைசூர்பா கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். மூலிகை மைசூர்பாவை சாப்பிட்டால் கொரோனா குணமடையும் என்ற விளம்பரத்தையடுத்து இனிப்புக்கடையின் உரிமையாளரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.