ஏனாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்த வெள்ளநீர்.. தவிக்கும் மக்கள்!

 

ஏனாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்த வெள்ளநீர்.. தவிக்கும் மக்கள்!

தென்மேற்கு பருவமழை தீவிரமாகி இருப்பதால் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சமீபத்தில் கனமழையால் கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவு 59 மக்களின் உயிரை பறித்த சம்பவம் பதைபதைக்க வைத்தது. அதுமட்டுமில்லாமல் பல இடங்களில் இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் கோதாவரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

ஏனாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்த வெள்ளநீர்.. தவிக்கும் மக்கள்!

இந்த வெள்ளநீர் கரைபுரண்டோடி புதுச்சேரியின் ஏனாம் பகுதிகளில் உள்ள ஆயிரக் கணக்கான வீடுகளில் புகுந்துள்ளது. வெள்ளநீரை வெளியேற்ற முடியாமல் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றார். வெள்ளம் சூழ்ந்துள்ள ஏனாமில் படகில் செல்ல வேண்டிய சூழலே நிலவுகிறது. வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பாற்ற புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் படகில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.