கொசஸ்தலை ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்- போக்குவரத்து துண்டிப்பு

கொசஸ்தலை ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்- போக்குவரத்து துண்டிப்பு

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, நல்லாட்டுர் தரைப்பாலம் நீரில் அடித்துச்செல்லப்பட்டது. இதனால் திருத்தணி பகுதிக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

கொசஸ்தலை ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்- போக்குவரத்து துண்டிப்பு

ஆந்திர மாநிலத்தில் பெய்த தொடர் மழை காரணமாக அம்மப்பள்ளி அணை நிரம்பியது. இதனால், அம்மப்பள்ளி அணையில் இருந்து விநாடிக்கு ஆயிரத்து 100 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டு வருவதால், திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை ஆற்றில் 5 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள், கொசஸ்தலை ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா எச்சரிக்கை விடுத்தார்.

கொசஸ்தலை ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்- போக்குவரத்து துண்டிப்பு

இந்த நிலையில், நல்லாட்டூர் அருகேயுள்ள என்.என். கண்டிகையில் தரைப்பாலம் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டது. இதனால் திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனிடையே 5 ஆண்டுகளுக்கு பிறகு கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை, அப்பகுதியை ஏராளமானோர் பார்வையிட்டு செல்கின்றனர்.