பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனை 18ம் தேதி தொடக்கம் – ரூ.1க்கு புக்கிங் செய்யலாம்

 

பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனை 18ம் தேதி தொடக்கம் – ரூ.1க்கு புக்கிங் செய்யலாம்

வரும் 18ம் தேதி முதல் பிக் சேவிங் டேஸ் விற்பனையை பிளிப்கார்ட் தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு தங்களுக்கு தேவையான பொருட்களை ஒரு ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள அந்நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனை 18ம் தேதி தொடக்கம் – ரூ.1க்கு புக்கிங் செய்யலாம்

ஆன்லைன் வர்த்தக துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் பிளிப்கார்ட், அவ்வப்போது மாபெரும் தள்ளுபடி விற்பனைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் பிக் சேவிங் டேஸ் சேல் என்ற தள்ளுபடி ஆபரை அறிவித்துள்ளது. இந்த மெகா தள்ளுபடி ஆபர் வரும் 18ம் தேதி தொடங்கி 21 வரை மொத்தம் 3 நாட்களுக்கு இருக்கும்.

பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனை 18ம் தேதி தொடக்கம் – ரூ.1க்கு புக்கிங் செய்யலாம்

இந்த சமயத்தில் பல ஸ்மார்ட்போன்கள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களை அதிக தள்ளுபடியில் பிளிப்கார்ட் வழங்கும் என தெரிகிறது. எனினும் பொருட்களின் தள்ளுபடி விபரங்களை பிளிப்கார்ட் வெளியிடவில்லை.

இந்த நிலையில், இந்த மெகா தள்ளுபடியின் போது தங்களுக்கான பொருட்களை வாங்குவதற்கு வசதியாக, தங்களுக்கு விருப்பமான பொருட்களை ஒரு ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம் என பிளிப்கார்ட் அறிவித்துள்ளது. மீதமுள்ள தொகையை 18ம் தேதி இரவு 12 மணிவரை செலுத்தலாம் என்றும் செல்போன்கள் மற்றும் டேபிளட்களை நோ காஸ்ட் இஎம்ஐயில் வாங்கலாம் என்றும் அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
எஸ்.முத்துக்குமார்