கோவையில் சாலையில் வேல் வரைந்த ஐந்து பேர் கைது! – இந்து அமைப்புகள் கொந்தளிப்பு

 

கோவையில் சாலையில் வேல் வரைந்த ஐந்து பேர் கைது! – இந்து அமைப்புகள் கொந்தளிப்பு

கோவையில் சாலையில் வேல் வரைந்தது தொடர்பாக ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. வேல் வரைந்த செயல் மக்களின் உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளது என்று மக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கோவையில் சாலையில் வேல் வரைந்த ஐந்து பேர் கைது! – இந்து அமைப்புகள் கொந்தளிப்பு
கோவையில் கவுண்டம்பாளையம் பகுதியில் சாலையில் பல்வேறு இடங்களில் வேல் வரையப்பட்டு இருந்தது. நடக்கும் இடத்தில் மிதித்து செல்லும் வகையில் வேல் வரையப்பட்டு இருந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பெரியார் அமைப்பைச் சார்ந்தவர்கள் இப்படி செய்திருப்பார்களோ என்ற சந்தேகம் எழுந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது, பா.ஜ.க, இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் இப்படி செய்தது தெரிந்தது. இதைத் தொடர்ந்து அந்த கட்சிகளைச் சேர்ந்த சதீஷ், சங்கர்பாண்டி, சீனிவாசன், தடாகம் பகுதியில் வரைந்த கார்த்திக், பாண்டி, மனோகரன், கார்த்தி, கெம்பட்டியில் வேல் வரைந்த சேகர், கண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பலர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
குனியமுத்தூர் பகுதியில் சாலையில் வேல் வரைந்த குருபரன், சந்தோஷ், அருண்குமார், சிவகணேஷ், அக்‌ஷய் வர்மா ஆகியோர் கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பா.ஜ.க, இந்து முன்னணி, பஜ்ரங்கதள், விஷ்வ இந்து பாஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். திடீரென்று விஷ்வ இந்து பரிஷத் மாநில இணைச் செயலாளர் அமர்நாத் சிவலிங்கம் தன் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்றார். உடனடியாக அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.

கோவையில் சாலையில் வேல் வரைந்த ஐந்து பேர் கைது! – இந்து அமைப்புகள் கொந்தளிப்பு
இதனால் இந்து அமைப்பினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் சிவலிங்கத்தை பிடித்து போலீஸ் நிலையத்துக்குள் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்து அமைப்புகளின் செயல் மற்றும் போராட்டத்தால் கோவையில் பதற்றம் நிலவுகிறது. வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் சாலையில் வேல் படம் வரைந்திருந்தால், அதை அவமானப்படுத்திவிட்டதாக பிரச்னை உருவாக்கியிருப்பார்கள். எனவே, இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத சின்னங்களை காலில் மதிபடும் வகையில் வரைவதை தடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.