இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்தவர்கள் மீது ராமேஸ்வரம் மீனவர் சங்கங்கள் புகார்

இலங்கை கடற்பகுதிக்குள்  நுழைந்தவர்கள் மீது ராமேஸ்வரம் மீனவர் சங்கங்கள் புகார்

ராமநாதபுரம்

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடிப்பில் ஈடுபட்ட மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவ சங்கங்கள் சார்பில் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. ராமேஸ்வரம் பகுதியில் இருந்து கடந்த 12ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற சச்சின் என பெயரிடப்பட்டிருந்த விசைப்படகு உள்பட சில படகுகள், அத்துமீறி இலங்கை நெடுந்தீவு கரை பகுதியில் நுழைந்து, தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை கடற்பகுதிக்குள்  நுழைந்தவர்கள் மீது ராமேஸ்வரம் மீனவர் சங்கங்கள் புகார்

இதனை தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்த இலங்கை மீனவர், ராமேஸ்வரத்தில் உள்ள மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும், மீனவ சங்கங்களுக்கும் அனுப்பி வைத்தனர். இந்த விவாகரம் தொடர்பாக நேற்று அனைத்து மீனவ சங்கங்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் தடையை மீறி சென்ற குறிப்பிட்ட படகு மற்றும் அதன் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மீன்வளத்துறை உதவி இயக்குனரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

இலங்கை கடற்பகுதிக்குள்  நுழைந்தவர்கள் மீது ராமேஸ்வரம் மீனவர் சங்கங்கள் புகார்

இதனிடையே, இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று 5-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.