அடுத்த 5 நாட்களுக்கு அரபிக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

அடுத்த 5 நாட்களுக்கு அரபிக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் கோடைக்காலம் நிலவி வந்த நிலையில், இன்றுடன் கத்திரி வெயில் என்னும் அக்னி நட்சத்திரம் முடிவடைந்தது. அதனால் படிப்படியாக வெப்பம் தணிந்து மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதால் மேற்கு மத்திய மற்றும் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு அடுத்த 5 நாட்களுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 5 நாட்களுக்கு அரபிக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இதன் காரணமாக தர்மபுரி, ஈரோடு, கரூர், நீலகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் திருப்பூர், வேலூர், கரூர், தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், திருச்சி, மதுரை, திருத்தணி ஆகிய இடங்களில் வெப்பம் அதிகமாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், வெப்பம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.