வேதாரண்யத்தில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை!

வேதாரண்யத்தில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை!

பலத்த காற்று வீசுவதால் வேதாரண்யத்தில் 3 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை.

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியது.

வேதாரண்யத்தில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை!

இந்நிலையில் நாகை வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 3,000 மீனவர்கள் பலத்த காற்று வீசி வருவதால் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை.

வேதாரண்யத்தில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை!

இதனிடையே தெற்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல், தென்மேற்கு அரபிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது கவனிக்கத்தக்கது.