தனியாரிடம் ரயில்வே செல்வது எப்போது? மத்திய ரயில்வே துறை அமைச்சகம் விளக்கம்

 

தனியாரிடம் ரயில்வே செல்வது எப்போது? மத்திய ரயில்வே துறை அமைச்சகம் விளக்கம்

இந்தியாவில் தனியார் ரயில் சேவை 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என மத்திய ரயில்வே துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தனியார் முதலீடுக்கு அனுமதி அளிக்க உள்ளதாக ரயில்வே தெரிவித்திருந்தது. 109 இணை பாதைகளில் 151 அதிநவீன ரயில்களை இயக்க தனியாருக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் தனியார் பங்களிப்பு மூலம் நவீன வசதிகள் அறிமுகம், குறைவான பயண நேரம், வேலைவாய்ப்பு உருவாக்கம், மேம்பட்ட பாதுகாப்பு, உலகத் தரம் வாய்ந்த சேவைகள் கிடைக்கும் என்றும் ரயில்வே தெரிவித்திருந்தது.

தனியாரிடம் ரயில்வே செல்வது எப்போது? மத்திய ரயில்வே துறை அமைச்சகம் விளக்கம்

இதனிடையே இந்தியாவில் 2024 மார்ச் மாதம் முதல் தான் தனியார் ரயில் சேவைகள் தொடங்கப்படும் என சில தகவல்கள் பரவியிருந்த நிலையில் டெண்டர் விடும் பணிகள் அனைத்தும் 2021 ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களுக்குள் நிறைவடைந்து விடும் எனவும் 2023 மார்ச் மாதம் முதல் இந்தியாவில் தனியார் ரயில் சேவை தொடங்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக சில குறிப்பிட்ட ரயில் தடங்களில் தனியார் சேவையை அனுமதிப்பதற்கான பல கட்ட ஆலோசனைகள் நிறைவடைந்து அதற்கான ஒப்புதல் சமீபத்தில் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பம்பார்டியர் இந்தியா, அதானி போர்ட்ஸ், டாடா ரியாலிட்டி, பிரான்சின், அல்ஸ்தாம், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த, டல்கோ, மெக்குயர் குழுமம் ஆகிய நிறுவனங்கள், இந்தியாவில் தனியார் ரயில் போக்குவரத்தை மேற்கொள்ள ஆர்வமாக உள்ளது குறிப்பிடத்தக்கது