முதல் பெண் – பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க புது இயக்குநர் நியமனம்

 

முதல் பெண் – பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க புது இயக்குநர் நியமனம்

இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் என்றாலே கோடிக்கணக்கில் ரசிகர்கள் பார்ப்பார்கள். இரு அணி வீரர்களும் கடும் அழுத்தத்தில் விளையாட வேண்டியிருக்கும். ஏனெனில், அது வெறும்போட்டியாக மட்டுமே பார்க்கப்படுவதில்லை என்பதே யதார்த்தம். நேற்றுதான் ஜிம்பாம்வே அணியை டி20 போட்டிகளில் வீழ்த்தி தொடரை வென்றிருக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி.

முதல் பெண் – பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க புது இயக்குநர் நியமனம்

சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாக இயக்குநர்கள் நியமனத்தில் நான்கு பேர் புதிதாக நியமிக்கப்பட்டார்கள். அவர்களில் அலியா ஜபார் எனும் பெண்ணும் ஒருவர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக பெண் ஒருவர் நிர்வாக இயக்குநர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்தப் பதவியில் அலியா ஜபார் இரண்டு ஆண்டுகள் பணியாற்றுவார். பல்வேறு தரப்பினரும் அலியா ஜபார் இந்தப் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவர், அலியா நியமனத்தை வாழ்த்து வரவேற்றுள்ளார்.

முதல் பெண் – பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க புது இயக்குநர் நியமனம்

அலியா ஜபார், தன்னம்பிக்கை தரும் சிறந்த உரைகளைக் கவரும் வகையில் பேசக்கூடிய பேச்சாளார். சமூக தொண்டுகளில் தன்னை இணைத்துக்கொள்ள விரும்புபவர். சமூக ஊடகங்களில் எப்போதும் அப்டேட்டாக வைத்திருப்பவர்.

அலியா ஜபாரின் வரவு பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்திற்கு ஆரோக்கியமான மாற்றங்களை உருவாக்கும் என்று எதிர்பார்ப்பு கூடியுள்ளது.