தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு தளர்வுகள் : பொது போக்குவரத்து, உணவகங்களுக்கு அனுமதி!!

 

தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு தளர்வுகள் : பொது போக்குவரத்து,  உணவகங்களுக்கு அனுமதி!!

2 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு தளர்வுகள் : பொது போக்குவரத்து,  உணவகங்களுக்கு அனுமதி!!

தமிழகம் முழுவதும் இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இன்று முதல் வருகிற 12-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் ,விடுதிகள் தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் உள்ள உணவகங்களில் காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை உரிய காற்றோட்ட வசதியுடன் நிலையான வழிகாட்டும் நடைமுறைகளைப் பின்பற்றி 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதி, தேநீர் கடைகளில் நிறைய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் தேநீர் அருந்த அனுமதி, தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்கள் இயங்கலாம்.

தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு தளர்வுகள் : பொது போக்குவரத்து,  உணவகங்களுக்கு அனுமதி!!

அருங்காட்சியங்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி, யோகா பயிற்சி நிலையங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் அனுமதி, டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 8 மணி வரை செயல்பட அனுமதி, அனைத்து துணிக் கடைகள் மற்றும் நகை கடைகள் உரிய காற்றோட்ட வசதியுடன் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் செயல்பட அனுமதி, வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் மாலை 8 மணி வரை செயல்பட அனுமதி ,மாவட்டங்களுக்கு இடையேயான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50% செயல்பட அனுமதி, பொழுதுபோக்கு கேளிக்கை பூங்காக்கள் 50% வாடிக்கையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.மாவட்டத்திற்குள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் பொது பேருந்து போக்குவரத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, குளிர்சாதன வசதி இல்லாமலும் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.