முதல் பேட்டிங் ஆஸ்திரேலியா – இந்திய அணியில் ஆடும் வீரர்கள் இவர்களே! InsVsAus

முதல் பேட்டிங் ஆஸ்திரேலியா – இந்திய அணியில் ஆடும் வீரர்கள் இவர்களே! InsVsAus

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிஒருநாள், டி20, டெஸ்ட் ஆகிய போட்டிகளில் ஆடிவருகிறது. இந்தத் தொடரில் முதன் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பேட்டிங் ஆட முடிவெடுத்தார். சொந்த மண்ணில் அதிக ரன்களைச் சேர்ப்பது, அதை எடுக்க விடாமல் தடுப்பது என்ற உத்தியை மேற்கொள்ளக்கூடும்.

முதல் பேட்டிங் ஆஸ்திரேலியா – இந்திய அணியில் ஆடும் வீரர்கள் இவர்களே! InsVsAus

அதன்படி ஓப்பனிங் வீரர்களாக ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வார்னரும் இறங்கினர். மிக நிதானமாக ஆடினர். 27 ஓவர் வரை விக்கெட்டைப் பறிக்கொடுக்காமல் அதேநேரம் சீராக ரன்ரேட்டை காத்துக்கொண்டு இருவரும் ஆடினர். இருவரும் அனுபவம் மிக்க வீரர்கள் என்பதை தனது பேட்டிங்கில் காட்டி வந்தார்கள்.

முதல் பேட்டிங் ஆஸ்திரேலியா – இந்திய அணியில் ஆடும் வீரர்கள் இவர்களே! InsVsAus

27.5 ஓவரில் முகம்மது ஷமி வீசிய பந்தில் அவுட்டானார் டேவிட் வார்னர். அவர் 76 பந்துகளில் 69 ரன்களை அடித்திருந்தார். அதில் 6 பவுண்ட்ரிகள் அடங்கும். அடுத்து களம் இறங்கியிருப்பவர் ஸ்டீவ் ஸ்மித். இவரைத் தொடர்ந்து மார்கஸ் ஸ்டொயினிஸ், லாபுசேன்ச், மேக்ஸ்வெல், சலெக்ஸ் கேரி, கம்மின்ஸ், ஸ்டார்க், ஸாம்பா, ஹோஸ்வுட் என ஆர்டர் இருக்கிறது.

முதல் பேட்டிங் ஆஸ்திரேலியா – இந்திய அணியில் ஆடும் வீரர்கள் இவர்களே! InsVsAus

இந்திய அணியில் ஷிகர் தவான், மயங் அகர்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ், கே.எல்.ராகுல், பாண்டியா, ஜடேஜா, சஹல், சைனி, பும்ரா எனும் பட்டியலில் களம் இறங்கியுள்ளார்கள். நல்ல அணி தேர்வுதான். ராகுல் ஐந்தாம் இடத்தில் இறக்குவது மட்டுமே கொஞ்சம் டவுட்டாக இருக்கிறது.

தற்போது வரை ஆஸ்திரேலிய அணி 31.4 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் சேர்த்திருக்கிறது.