‘பட்டாசு புகையால் கொரோனா நோய் பரவல் அதிகரிக்கும்’ : மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கை!

‘பட்டாசு புகையால் கொரோனா நோய் பரவல் அதிகரிக்கும்’ : மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கை!

பட்டாசு புகையால் குருநாத் தோற்றம் பரவல் அதிகரிக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தமிழகத்தில் கொரோனா நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. பெரும்பாலானவர்களுக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தீபாவளி பண்டிகை நெருங்குவதால் தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் புகை, சுவாசப்பாதையை தாக்கி அறிகுறி இல்லாத ஒருவருக்கு இருமல் உள்ளிட்ட அறிகுறி ஏற்படும். இதனால் மற்றவர்களுக்கு கொரோனா பரவலாம்.

‘பட்டாசு புகையால் கொரோனா நோய் பரவல் அதிகரிக்கும்’ : மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கை!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெகட்டிவ் என வந்திருந்தாலும் நுரையீரல் பாதிப்பு சீரடைய சில வாரங்கள் எடுக்கும். அப்போது பட்டாசு புகையால் நுரையீரல் பாதிப்பு மேலும் தீவிரமடைந்து அவர்களின் உடல்நிலைகுன்றலாம். இதனால் அதிக ஒலி எழுப்பும் அல்லது அதிக நேரம் எடுக்கும் பட்டாசுகளை கொரோனா நோயாளிகள் இருக்கும் இடத்தில் வெடிக்க வேண்டாம். காற்றில் ஆக்ஜிசன் அளவு குறைந்து கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

‘பட்டாசு புகையால் கொரோனா நோய் பரவல் அதிகரிக்கும்’ : மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கை!

இதனிடையே காற்று மாசு மற்றும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, டெல்லி ,ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட 8 மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தமிழகத்தில் பட்டாசு தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பட்டாசு விற்பனைக்கு அனுமதி கொடுத்துள்ளது .