காற்று மாசு அதிகம் உள்ள மாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை!

 

காற்று மாசு அதிகம் உள்ள மாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை!

காற்று மாசு அதிகமாக இருக்கும் மாநிலங்களில் பட்டாசு வெடிக்கக் கூடாது என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காற்று மாசு அதிகம் உள்ள மாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை!

வடமாநிலங்களில் ஆண்டுதோறும் பெரும் பிரச்னையாக இருக்கிறது. அறுவடை முடிந்து விளை நிலங்கள் எரிக்கப்படுவதால், உருவாகும் இந்த காற்று மாசுவை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக டெல்லி, ராஜஸ்தான், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டது. பட்டாசு வெடித்தால் காற்று மாசு அதிகரிக்கும் என்பதாலும், கொரோனாவால் பாதித்த மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாலும் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

காற்று மாசு அதிகம் உள்ள மாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை!

இதனிடையே, காற்று மாசுபாட்டால் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கலாமா என மாநில அரசுகளிடம் தேசிய பசுமை தீர்ப்பாயம் கருத்து கேட்டிருந்தது. அதற்கு, மாநில அரசுகள் ஒப்புதல் அளித்ததாக தெரிகிறது. இந்த நிலையில், காற்று மாசு அதிகமாக உள்ள மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லி முழுவதும் இன்று நள்ளிரவு முதல் பட்டாசு விற்க வெடிக்க தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது.