பட்டாசு விபத்தா? – தகவல் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிமுகம்!

பட்டாசு விபத்தா? – தகவல் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிமுகம்!

சிவகாசியில் பட்டாசு வெடி விபத்து ஏற்பட்டால், மக்கள் தொடர்பு கொள்ள இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், பட்டாசு உற்பத்தி தீவிரமடைந்து வருகின்றன. பட்டாசு என்றாலே சிவகாசி தான். பண்டிகைக்கு தேவையான பட்டாசுகள் பெரும்பாலும், சிவகாசியிலேயே தயாரிக்கப்படுகிறது. மிகுந்த பாதுகாப்புடனே ஊழியர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டாலும், அவ்வப்போது மின்கசிவு உள்ளிட்ட காரணங்களால் வெடி விபத்து ஏற்படுகிறது.

பட்டாசு விபத்தா? – தகவல் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிமுகம்!

கடந்த சில நாட்களுக்கு முன்னர், செங்குளம் கிராமத்தில் செயல்பட்டு வந்த சிவகாசியை சேர்ந்த நபர் ஒருவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. அந்த கோர விபத்தில், 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவ்வாறு வெடி விபத்துகள் அப்பகுதியில் அதிகரித்து வருகின்றன.

பட்டாசு விபத்தா? – தகவல் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிமுகம்!

இந்த நிலையில், பட்டாசு, தீப்பெட்டி ஆலைகளில் அசம்பாவிதம் ஏற்பட்டால் 1800 425 6743 என்ற எண்ணில் தொடர்புக் கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று சிவகாசி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் வேலுமணி அறிவித்திருக்கிறார்.