கழிவறையில் பிணமாக கிடந்த தீயணைப்பு வீரர்…வாக்கு எண்ணிக்கை மையத்தில் விபரீதம்!!

 

கழிவறையில் பிணமாக கிடந்த தீயணைப்பு வீரர்…வாக்கு எண்ணிக்கை மையத்தில் விபரீதம்!!

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த தீயணைப்பு வீரர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கழிவறையில் பிணமாக கிடந்த தீயணைப்பு வீரர்…வாக்கு எண்ணிக்கை மையத்தில் விபரீதம்!!

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்த முடிந்த நிலையில் மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடந்து முடிந்த தேர்தலில் 75 இடங்களில் உள்ள வாக்கு மையத்தில் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது . பாதுகாப்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் என பலரும் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளதால் 360 போலீசார் பாதுகாப்பு பணியில் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர் . அத்துடன் அங்கு தீயணைப்பு வாகனத்துடன் 6 வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

கழிவறையில் பிணமாக கிடந்த தீயணைப்பு வீரர்…வாக்கு எண்ணிக்கை மையத்தில் விபரீதம்!!

இந்நிலையில் திருமக்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்து வரும் 48 வயதான அற்புதம் என்பவர் சிறப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் பணியில் இருந்த போது கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அங்கு எதிர்பாராதவிதமாக மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அற்புதத்தின் அலறல் சத்தத்தை கேட்டு அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இறந்த தீயணைப்பு வீரர் அற்புதத்திற்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.