மும்பை ஸ்டுடியோவில் பயங்கர தீ விபத்து: விண்ணை முட்டும் புகை!

 

மும்பை ஸ்டுடியோவில் பயங்கர தீ விபத்து: விண்ணை முட்டும் புகை!

மும்பையில் மேற்கு கோரேகான் பகுதியில் அமைந்திருக்கும் சினிமா ஸ்டுடியோவில் எதிர்பாராவிதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விண்ணை முட்டும் அளவுக்கு புகை எழுந்துள்ளது.

மும்பை ஸ்டுடியோவில் பயங்கர தீ விபத்து: விண்ணை முட்டும் புகை!

இதனால் அப்பகுதியே புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. தகவலறிந்து உடனே அங்கே வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்த கடுமையாகப் போராடிவருகின்றனர்.

தீ விபத்து ஏற்பட்டவுடன் ஸ்டுடியோ மூடப்பட்டதால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. மின்கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மும்பையிலுள்ள மிகவும் பிரபலமான ப்ளிம் சிட்டியில் தீ விபத்து ஏற்பட்டிருப்பது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.